முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 23rd October 2021 06:00 AM | Last Updated : 23rd October 2021 06:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அழகிய தீவுக்கூட்டம் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. நிலா வடிவில் இருக்கும், சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்....
2. பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது...
3. அரைக்க அரைக்க மணம் வீசும்...
4. பெரிய நகரத்தை இப்படி அழைக்கலாம்...
5. சூரியனுக்கு மற்றொரு பெயர்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அப்பளம்,
2. வந்தனம்,
3. சந்தனம்,
4. மாநகரம்,
5. கதிரவன்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : அந்தமான்