விண்வெளியில் ஒரு விடுதி

கலிபோர்னியாவின் ஆர்பிட் அஸ்ùஸம்ப்ளி கார்ரேஷன், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம், மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் எல்லாம் சேர்ந்து ஒரு அமர்க்களமான விஷயத்தைச் செய்திருக்கிறார்கள். 
விண்வெளியில் ஒரு விடுதி


கலிபோர்னியாவின் ஆர்பிட் அஸ்ùஸம்ப்ளி கார்ரேஷன், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம், மற்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் எல்லாம் சேர்ந்து ஒரு அமர்க்களமான விஷயத்தைச் செய்திருக்கிறார்கள். 

அது என்னன்னா, விண்வெளியில் ஒரு தங்கும் விடுதி திறக்கப்போகிறார்களாம்! 
சுமார் 400 அறைகள் கொண்ட ஓட்டல்! ஓட்டிலில் ஜிம், பார், உணவு விடுதி எல்லாம் இருக்கப்போகிறதாம்! ஒரு சக்கரம் போன்ற அமைப்பில் உள்ள இந்த ஓட்டல் சற்று மெதுவாகச் சுற்றிக்கொண்டிருக்குமாம். இதனால் செயற்கையான ஈர்ப்பு சக்தி ஏற்படுமாம்! இந்த வசதியினால் பூமியில் கிடைக்காத விளையாட்டு அனுபவங்கள் அங்கே கிடைக்கும்னு சொல்றாங்க... ஓட்டல் அறையிலிருந்து விண்வெளி, பூமி எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாமாம்!

அது சரி, எவ்வளவு சார்ஜ் தெரியுமா? ஒரு ஆள் மூன்று நாட்கள் தங்குவதற்கு 50 லட்சம் அமெரிக்க டாலர்கள்! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா ஆர்வமுள்ளவர்கள் எல்லோரும் ஓட்டல் திறக்கும் நாளை ரொம்ப ஆவலா எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. 

எப்பப்பா திறப்பாங்கன்னு கேட்கறீங்களா? 

2027 - ஆண்டு! இன்னும் சரியா தேதி குறிப்பிடப்படலே....!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com