முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By -ரொசிட்டா | Published On : 30th October 2021 09:28 PM | Last Updated : 30th October 2021 09:28 PM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அழகிய விலையுயர்ந்த கல் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
1. மகாபலிபுரத்துக்குச் சொந்தக்கார அரசன்...
2. எரித்தால் வாசனை தரும்...
3. இப்படி இருந்தால் நிறைய பணம் சேர்க்கலாம்...
4. சென்னைவாசிகளுக்கு, மாலையில் மிகவும் பிடித்த இடம்...
5. அரசர்களின் தோற்றம் இப்படி இருக்கும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. மாமல்லன்,
2. சாம்பிராணி,
3. சிக்கனம்,
4. கடற்கரை,
5. கம்பீரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : மாணிக்கம்