சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் சுவையான பலகாரம் ஒன்றின் பெயர் கிடைக்கும். 

விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...


1. போட்டிகளில் வெற்றி பெற்றால் இது கிடைக்கும்...
2. இந்தப் பழத்துக்கு கோடை காலத்தில் கிராக்கி அதிகம்...
3. வணிகத்தின் மறு பெயர்...
4. பக்கத்து வீட்டுக் குட்டிப்பையனுக்கும், முருகனுக்கும் இந்தப் பெயர்தான்...
5. தாத்தா,  பாட்டி, அப்பா, அம்மா, பிள்ளைகள் எல்லாம் சேர்ந்தால்...

விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. பதக்கம்,  
2. தர்பூசணி,  
3. வியாபாரம்,  
4. சரவணன்,  
5. குடும்பம்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : பணியாரம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com