விடுகதைகள்

குளத்தில் தலையை முக்கும் பறவை, குடித்துக் குடித்துத் திரும்பும் பறவை, வயலைக் கொத்தி நடக்கும் பறவை, வார்த்தை கூறிச் செல்லும் பறவை


1. குளத்தில் தலையை முக்கும் பறவை, குடித்துக் குடித்துத் திரும்பும் பறவை, வயலைக் கொத்தி நடக்கும் பறவை, வார்த்தை கூறிச் செல்லும் பறவை
2. பட்டுத் துணியைச் சுருட்ட முடியாது, பத்தாயிரம் முத்தைக் கோர்க்கவும் முடியாது...
3. கட்டி வைத்தால் நடந்து போவான், அவிழ்த்து விட்டால் சும்மா கிடப்பான்....
4. அப்பாவுக்கு இரு பிள்ளைகள், அடிஅடியென்று அடித்தார்கள்... அடித்த பேரைத் தடுக்கவும் இல்லை, அலறும் தந்தையைத் தேற்றவும் இல்லை. ஆனாலும், அநேகர் ஆனந்தப்பட்டார்கள்...
5. கிளையுள்ள மரத்தைத் தலையிலே தாங்கும். இது என்ன?
6. நாக்கில்லாதவன், நல்லது சொல்வான்...
7. அங்குல மாட்டுக்கு அரை மைல் வால்...
8. வேளா வேளைக்கும் குளிப்பான், மிகவும் சுத்தக்காரன்...

விடைகள்

1. இங்க் பேனா (கட்டைப் பேனா)
2. வானம்,  நட்சத்திரங்கள்  
3. பூட்ஸ்
4. மிருதங்கம், மத்தளம்  
5.  கலைமான்  
6.  புத்தகம்  
7.  ஊசியும் நூலும்  
8.  சாப்பிடும் தட்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com