முன் மாதிரியான பொம்மைகள்!

ஆகஸ்டு 4 - ஆம் தேதி பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஆறு புதிய பொம்மைகளைத் தயாரித்திருக்கிறது! அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்!
முன் மாதிரியான பொம்மைகள்!

ஆகஸ்டு 4 - ஆம் தேதி பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஆறு புதிய பொம்மைகளைத் தயாரித்திருக்கிறது! அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்!

இதில் என்ன சிறப்பு என்றால் அந்த ஆறு பொம்மைகளும் நிஜ வாழ்க்கையின் கதாநாயகிகள்! வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள்! தைரியசாலிகள்! உறுதி மிக்கவர்கள்!

அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு:

1 . அமி ஓ சுலிவான்

இவர் ப்ரூக்ளின் நகரில் வைக்காஃப் உயர்தர மருத்துவ மனையில் பணி புரிந்தவர். அமெரிக்காவைச் சேர்ந்தவர்.இவர் கோவிட் - 19 நோய்க்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது அந்நோயால் இவரே பாதிக்கப்பட்டார். உயிருக்குப் போராடி ஒருவழியாக தேறிய பிறகு தைரியமாகப் பணிக்குச் சேர்ந்து கோவிட் - 19 நோயாளிகளை சிறப்பாக கவனித்துக் கொண்டார்.

2. பேராசிரியர் சாரா கில்பர்ட்!

தடுப்பூசிக் கண்டுபிடிப்பில் மிகக் கடுமையாக உழைத்தவர்! இங்கிலாந்தைச் சேர்ந்தவர். ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். கடைசியில் இவர் அஸ்ட்ரா ஜெனக்கா கோவிட் - 19 என்ற தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். ஆராய்ச்சி சாலையில் இரவும் பகலும் உழைத்தவர். இவர் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தின் மூலம் பல லட்சக்கணக்கான மனிதர்கள் காப்பாற்றப்பட்டனர்.

3 . டாக்டர் சிகா ஸ்டேசி ஒரிவியா!

இவர் ஒரு மன நல மருத்துவர். அமெரிக்காவின் டோரண்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். மருத்துவத் துறையில் இருந்த பலர் நிற வேறுபாட்டைக் கடைப்பிடித்தனர். அது பற்றிய விழிப்புணர்வை ஊட்டி அனைவருக்கும் சிகிச்சை அளிக்க உதவிகள் செய்தார் ! மேலும் அவர் சார்ந்த பல்கலைக் கழகத்தில் படித்த 259 மாணவர்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்! கல்வியை முடித்து பல்கலைக் கழகத்தில் இருந்த அனைவரும் இவருக்குக் கண்ணீர் மல்க பிரியா விடை அளித்தனர்!

4 . டாக்டர் ஆட்ரி ஸ்யூ க்ரூஸ்!

இவர் முதலில் மின்துறைப் பொறியாளராக இருந்தார். பிறகு மருத்துவத் துறையில் ஈடுபட்டார். மருத்துவத் துறையில் ஆசிய ஐரோப்பிய வேறுபாடுகளைக் களைய பெருமுயற்சிகள் மேற்கொண்டவர். மிகச் சிறந்த முன்களப் பணியாளர். ஸ்டெம் துறையில் ஆராய்ச்சிகள் செய்தவர்.

5 . டாக்டர் கிர்பி ஒயிட்!

இவர் ஒரு பொது மருத்துவர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். தன்னார்வலர்கள், மற்றும் உடைதயாரிப்பவர்களை ஊக்கப் படுத்தி 750 கிராம மருத்தவ மனைகளுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கினார். பல ஆயிரம் உடைகள் தயாரிக்க வேண்டியிருந்தது! அதில் வெற்றி கண்டார். இந்த உடை பலரை கோவிட் நோயிலிருந்து பாதுகாத்தது!

6 . டாக்டர் ஜாக்குலின் டி ஜீன்ஸ்!

மரபணு மற்றும் ஸ்டெம் ஆராய்ச்சியில் நிபுணர். பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். இவரது துணை பல ஆயிரம் பேரை கோவிட் நோயிலிருந்து காப்பாற்றியது!

"குழந்தைகளுக்கு விஞ்ஞானம், மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் ஏற்படவும், சமூக சேவை செய்தோரை முன்மாதிரியாக ஏற்று, பின்பற்றும் நோக்கம் ஏற்படவும் இந்த பொம்மைகள் பெரிதும் உதவியாக இருக்கும்.... மேலும் கண்ணுக்குத் தெரியாத பல முன்களப்பணியாளர்களுக்கு இந்த பொம்மைகள் சமர்ப்பணம்!' என்று இந்த பார்பி பொம்மைத் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

விளையாட்டு பொம்மைகள் விஞ்ஞானத்தையும், விழிப்புணர்வையும் ஊட்ட முயல்கின்றன. பாராட்டுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com