நூல் புதிது

பூனை சவாரி,.... வீசி மகிழலாம்,.... கீக்கீ கிளியக்கா முதலான 14 பாடல்களின் அருமையான தொகுப்பு! ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை! குழந்தை இலக்கியங்களில் தீராத பற்றுள்ளவர்.
நூல் புதிது

கீக்கீ கிளியக்கா (சிறுவர் கதைப்பாடல்)
ஆசிரியர் : கன்னிக்கோவில் ராஜா

பக்கம் - 36
விலை : ரூ 30/-

பூனை சவாரி,.... வீசி மகிழலாம்,.... கீக்கீ கிளியக்கா முதலான 14 பாடல்களின் அருமையான தொகுப்பு! ஆசிரியருக்கு அறிமுகமே தேவையில்லை! குழந்தை இலக்கியங்களில் தீராத பற்றுள்ளவர். அதற்காக, ஏராளமான படைப்புகளையும் செய்தவர். குழந்தை இலக்கியப் படைப்புப் புத்தகங்களை வடிவமைப்பதிலும் வல்லவர்! படைப்பாற்றல் மிக்கவர்! அத்தனை பாடல்களும் மிக அருமை! சிறிய செய்திகளும், கதைகளும் ஒருங்கே அமைந்த பாடல்கள்! உதாரணமாக, தன் நிழலைப் பார்த்து, தானே பயந்த புலி மரத்தின் நிழலில் சென்றபிறகு அது மறைந்ததையும், பிறகு மரங்களை ஏராளமாக நடுவதும் மிக அருமையான கற்பனை! மனதைக் கொள்ளை கொள்ளும் புத்தகம்! இப்புத்தகத்தைப் படிக்கும் அனைவரும் ஆசிரியருக்கு ஒரு சபாஷ் போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! சிறப்பான செய்தி என்னவென்றால் பாடல்களின் இறுதியில் ணத கோடும் தரப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்தால் பாடல்களின் இனிய ஒலி!

அம்முவின் நாய்க்குட்டிப் பட்டாளம் (சிறுவர் சிறுகதைகள்)
ஆசிரியர் - இரா . மேகலா

பக்கம் - 100
விலை - ரூ . 90/-

உயிர்களிடத்தில் அன்பு,..... நொறுக்குத்தீனியின் தீமைகள் போன்ற அறிவுரைகளை, இனியன் தோட்டத்து வண்ணத்துப்பூச்சி,.... சுவையான லேஸூம் சுமையான நிஷாந்தும்.... முதலான 10 கதைகள் மூலமாக சுவாரசியமான கதைகளாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். அனைத்தும் அருமை. மேற்கண்ட இரு நூல்களையும் வெளியிட்டோர் - லாலிபாப் சிறுவர் உலகம் - 28 / 11, கன்னிக்கோயில் பள்ளம், அபிராமபுரம் முதல் தெரு, சென்னை - 600018. கைபேசி - 9841236965.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com