அங்கிள் ஆன்டெனா

தேனீக்கள் கொட்டுவதால் உயிரினங்கள் இறந்து போகும் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது உண்மையா?
அங்கிள் ஆன்டெனா

கேள்வி: தேனீக்கள் கொட்டுவதால் உயிரினங்கள் இறந்து போகும் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இது உண்மையா?

பதில்: இதில் எள்ளளவும் உண்மை கிடையாது... இப்படித்தான் நம் நாட்டில் பலர் பலவிதமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் தீர ஆராய்ந்து முடிவுக்கு வர கற்றுக்கொள்ளுங்கள்.

தேனீ கொட்டி, பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதை, கால்நடை மருத்துவமனைகளில் பார்த்திருக்கிறேன். விலங்குகளின் கண் இமைகள் காது மடல்கள், உதடுகள், கழுத்து போன்ற இடங்களில் வீக்கம் இருக்கும். 

மருத்துவர்கள் வீங்கிய பகுதிகளில் பதிந்திருக்கும் தேனீயின் கொடுக்குகளை மிகவும் பொறுமையாக அகற்றுவார்கள். பின்னர் அதற்கான வலி நிவாரணி மருந்தைக் கொடுப்பார்கள். கடிபட்ட சுவடே தெரியாமல் வீக்கங்கள் மறைந்தே போகும். 

அதற்காக அசட்டுத் தைரியத்துடன் தேன் கூட்டில் கை வைத்துவிட்டு அவதிப்படாதீர்கள்... அதற்கு நான் பொறுப்பல்ல...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com