அங்கிள் ஆன்டெனா

பொதுவாக முள்ளம்பன்றி சாதுதான்.  ஆனால் அதன் முட்கள்தான் ரொம்ப ரொம்ப ஆபத்தானவை.
அங்கிள் ஆன்டெனா


முள்ளம்பன்றி மிகவும் ஆபத்தான விலங்காமே, உண்மையா?

பொதுவாக முள்ளம்பன்றி சாதுதான்.  ஆனால் அதன் முட்கள்தான் ரொம்ப ரொம்ப ஆபத்தானவை. முள்ளம்பன்றி குழந்தையாக இருக்கும்போது புசுபுசுவென்று அடர்த்தியான நீண்ட ரோமங்களுடன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் வயது ஆக ஆக இந்த ரோமங்கள் தடித்து, கெட்டியாகி முட்களாகிவிடுகின்றன. முன்பெல்லாம் சிலேட்டில் எழுதுவதற்கு குச்சி, பல்பம் என்று ஒன்று இருக்கும்.  அதுபோல இருக்கும் இந்த முட்கள் எண்ணிக்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கும். இவைதான் முள்ளம்பன்றியின் கவச குண்டலங்கள். ஆபத்திலிருந்து அவற்றைப் பாதுகாப்பவை. ஆபத்து வருகிறது என்று உணர்ந்தவுடன் இந்த முட்கள் சிலிர்த்துக் கொள்ளும். இந்த சிலிர்ப்புடன் முள்ளம்பன்றி எதிரியின் மேல் வேகமாகப் பாயும்.

இப்படிப் பாயும்போது இந்த முட்கள் எதிரியின் உடம்பில் ஆங்காங்கே குத்திக் கொள்ளும். மேலும் இந்த முட்களின் முனைகள் கொக்கிகள் போல இருப்பதால் இன்னும் ஆபத்து. அவ்வளவு சீக்கிரமாக இந்த முட்களை விடுவித்துவிட முடியாது. கொக்கிகள் உடம்பைக் கிழித்து விடுவதால், பெரிய விலங்குகள் கூட சில சமயங்களில் மரணத்தைச் சந்தித்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com