சொல் ஜாலம்
By ரொசிட்டா | Published On : 09th April 2022 12:00 AM | Last Updated : 09th April 2022 12:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் மரியாதைக்கான சொல் ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள்.
1. நல்லதைப் பார்த்தால் கிடைக்கும் அனுபவம்...
2. மந்திரவாதிகளிடம் இருப்பது... நரியிடம்கூட...
3. சோகத்துக்கு மற்றொரு பெயர்...
4. காட்டிலே கிடைத்த கட்டை, மணக்கும்...
5. வீடுகளையும் மரங்களையும் ஏன் மனிதர்களையும் புரட்டிப் போடும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. பரவசம்
2. தந்திரம்
3. வருத்தம்
4. சந்தனம்
5. பூகம்பம்
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : வந்தனம்