கடி

கடி

"எதுக்குப்பா கடவுள்கிட்ட இன்னொரு தலை வேணும்னு வேண்டிக்கிறே...?''
"நான் ஒரு தலைப்பட்சமா செயல்பட்றேன்னு  ஆபீசுல எல்லோரும் சொல்றாங்க... அதுக்குதான்''

"சார்... ரகு வீட்டுல இருக்கானா?''
"இருக்கான். கொஞ்சம் வெயிட் பண்ணு. வாட்ஸ் ஆப்ல "உன் ஃபிரண்டு ரவி வந்திருக்கான்னு' மெசேஜ் பண்ணிருக்கேன்... வந்துடுவான்''


"ஏன்டி மாலா... நீல மாம்பழம் வாங்கி வரச் சொன்னா... வெறும் கையோட வந்திருக்கியே?''
"மார்க்கெட் பூரா அலைஞ்சதுதான் மிச்சம் பாட்டி... அந்தக் கலர்ல மாம்பழமே இல்லையாம்!''


"உன்ன மட்டும் சார் எதுவுமே கேட்க மாட்டேங்கிறாரே... என்னடா ரவி சொக்குப்பொடி போட்ட...?''
"பொடியெல்லாம் போடலே... தினமும் பேஸ்புக்குல அவர் போடுற போஸ்டுக்கெல்லாம் "லைக்' போடுறேன்... அதான் காரணம்''


"புத்தகக் காட்சி நடக்குதாமே ரோஸி...  எங்க  நடக்குது?''
"அது எங்கேயும் நடக்காதுடி... அங்கேயேதான் இருக்கும். நாமதான் போகணும் '' 

"நல்லா படிச்சு எக்ஸாம்ல பாஸ் பண்ற வழியப் பாரு... இல்லன்னா நடு ரோட்டுலதான் நிக்க வேண்டி வரும்!''
"அப்ப.... டிராபிக் போலீஸ்காரங்க எல்லாம் நல்லா படிக்காதவங்களாப்பா....?''

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com