அங்கிள் ஆன்டெனா (07/08/2022)

வெயிலில் சிறிது நேரம் நின்றுவிட்டு நிழலுக்கு வந்தவுடன் கண்கள் இருட்டுவது போல இருக்கிறதே, இதற்குக் காரணம் என்ன? 
அங்கிள் ஆன்டெனா  (07/08/2022)

வெயிலில் சிறிது நேரம் நின்றுவிட்டு நிழலுக்கு வந்தவுடன் கண்கள் இருட்டுவது போல இருக்கிறதே, இதற்குக் காரணம் என்ன?
கண்ணில் கருவிழி என்று நாம் அழைக்கும் பகுதி உண்மையில் நிறமற்ற கார்னியா (cornea) என்பதாகும். அதற்கு உட்புறம் ஐரிஸ் (iris) என்னும் மெல்லிய சதைதான் கருப்பாக இருக்கும். அதன் நிறம்தான் வெளியே கருவிழியாகத் தெரிகிறது. இந்த ஐரிஸ் என்பது நடுவில் ஒரு துளையுடனும் சுருங்கி விரியும் தன்மையுடனும் இருக்கும். 
இந்தத் துளைதான் பாவை (pupil) ஆகும். இதை ஒட்டி லென்ஸ் இருக்கும். பாவை வழியாக உள்ளே செல்லும் ஒளி அலைகள் லென்ஸின் (lens) வழியாக ஒளிவிலகல் அடைந்து கண்ணின் கடைசி பாகமான விழித்திரையில் 
(retina) விழுகின்றன. 
அங்கிருக்கும் நரம்புகள் அந்த விளைவை மூளைக்குத் தெரிவிக்க மூளை அதை உணரும். நாம் பார்க்கும் விஷயம் என்னவென்று நமக்குத் தெரிவிக்கும். 
இவ்வாறாக, கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். திடீரென்று வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கோ அல்லது வெயிலில் இருந்து நிழலுக்கோ வரும்போது ஐரிஸ் விரிய எடுத்துக்கொள்ளும் அந்த ஒரு கணம் ஒளி போதாததால் லேசாக இருட்டும். அவ்வளவே!
- ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com