அங்கிள் ஆன்டெனா

ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் வருவதுபோல டைனோசர்கள் உண்மையிலேயே இருந்தனவா, அவற்றில் எத்தனை வகைகள் இருந்தன?
அங்கிள் ஆன்டெனா


ஜூராசிக் பார்க் திரைப்படத்தில் வருவதுபோல டைனோசர்கள் உண்மையிலேயே இருந்தனவா, அவற்றில் எத்தனை வகைகள் இருந்தன?

பல்லி, ஓணான், பச்சோந்தி ஆகியவற்றைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? இவை ஊர்வன வகையைச் சேர்ந்தவை என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த டைனோசர்களும் ஊர்வன வகையைச் சேர்ந்தவைதான். அதாவது பல்லி, ஓணான் பச்சோந்தி ஆகியவற்றின் முன்னோர்கள். இப்படிப்பட்ட டைனோசர்கள் உலகில் இருந்தன என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால், கொஞ்ச காலத்துக்கு முன்பு  அல்ல, சுமார் 2030 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இவை பூமியில் தோன்றி வாழ்ந்திருக்கின்றன. 1214 கோடி ஆண்டுகள் வரைக்கும், அதாவது, வரலாற்றில் மிசோசாயிக் காலம் வரை இவை பூமியில் உண்டு, விளையாடி, குட்டிகள் போட்டு குடித்தனம் நடத்தியிருக்கின்றன என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

இவற்றில் சைவம், அசைவம் என்ற பிரிவுகளில் பல வகை டைனோசர்கள் இருக்கத்தான் செய்தன. இவற்றில் சைவப் பிராணியான பிராக்கியேசர் என்ற டைனோசர்கள் மிக மிகப் பெரிதாக 80 டன் எடை வரை இருந்திருக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com