முத்துக்கதை: உண்மையான ஏழை!

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க நினைத்தார்.
முத்துக்கதை: உண்மையான ஏழை!


ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க நினைத்தார். கிராமத்தில் உள்ள ஓர் ஏழையின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரு தினங்கள் அங்கே இருவரும் தங்கினர். பின்னர் வீட்டிற்குத் திரும்பியதும் தன் மகனிடம் "மகனே! ஏழை எப்படி வாழ்கிறான்?' எனக் கேட்டார்.
அதற்கு மகன், ""அப்பா,  நம் வீட்டில் ஒரே ஒரு நாய்தான் இருக்கிறது. கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஒன்றிரண்டு விளக்குகள் வைத்துள்ளோம். அந்தக் கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகின்றன.  நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரியது. ஆனால், அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்கிறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலைப் பருகுகிறோம்.  அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலைக் கறந்து சாப்பிடுகிறார்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். அவர்கள் அன்றன்றைக்குச் செடியில் இருந்து பறித்து பச்சைப் பசேல் என இருக்கும் காய்கறிகளையே உண்ணுகிறார்கள். நாம் வீட்டைச் சுற்றி காம்ப்பெüன்ட் கட்டிப் பாதுகாக்கிறோம்.  அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது'' என்று சொல்லிகொண்டே போனான்.

மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடையச் செய்தது. "யார் உண்மையான ஏழை' என்று தந்தை சிந்திக்கத் தொடங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com