செய்திச் சிட்டு!

இறக்கையில் ஒரு குட்டிச் சுதந்திரக் கொடியை ஏந்தியவாறு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுக் கிளையில் வந்து அமர்ந்தது சிட்டு.
செய்திச் சிட்டு!


இறக்கையில் ஒரு குட்டிச் சுதந்திரக் கொடியை ஏந்தியவாறு ஒரு ரவுண்ட் அடித்துவிட்டுக் கிளையில் வந்து அமர்ந்தது சிட்டு.
பிள்ளைகள் அனைவரும், ""ஹாய்... சிட்டு!'' என்று ஆர்ப்பரித்தனர். 
""சரி நேரா விஷயத்திற்கு வரேன்... இந்த ஆண்டு கஸகஸ்தானிலேயிருந்து, காசிம் ஜோமார்ட் தோகயேவ்; கிர்கிஸ்தானிலேயிருந்து சாதிர் ஜபரோவ்; தஜி கிஸ்தானிலிருந்து இமோமாலி; துர்க்மேனிஸ்தானிலிருந்து குர்பாங்குலி பெர்டிமுகமதோ; உஸ்பெகிஸ்தானிலிருந்து ஷவ்காத் மிர்சியோயெவ் ஆகியோர் சிறப்பு விருந்தினரா நம்ம நாட்டுக் குடியரசு தினத்திற்கு வரப்போறாங்க...''
""நல்ல நியூஸ்தான்...'' என்றான் ராமு.
""சரி குடியரசு தினம்னா என்ன தெரியுமா?''
""ஏன் தெரியாது? நம்ம நாட்டுக்கு ஓர் அரசியல் அமைப்புச் சட்டம்  உருவாக்கினோம். அதைத் தயாரிக்க ஒரு குழு இருந்தது. அதற்குத் தலைவர்தான் டாக்டர் அம்பேத்கர். அந்த அரசியல் சட்டத்தை நிறைவேற்றிய நாள்தான் குடியரசு தினம். சரியா?!'' என்றான் பாலா.
""சபாஷ் பாலா! சரி... ஏன் ஜனவரி 26ஆம் நாளை குடியரசா தேர்ந்தெடுத்தாங்க தெரியுமா?'' 
""ஏன்?'' என்று கேட்டாள் லீலா.
 ""இந்தியா சுதந்திரமடைவதற்கு முன், 
"பூரண ஸ்வராஜ்' என்று ஓர் இயக்கம் இருந்தது. இந்தப் "பூரண ஸ்வராஜ்' அறைகூவலை நினைவுகூர காந்தியடிகள் ஜனவரி 26ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தார். 
அப்போது அனைத்துத் தலைவர்களும்  ""பொருளாதாரம், அரசியல், கலாசாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நம் தாய்நாட்டிற்குக் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும், இறைவனுக்கும் செய்யும் துரோகம்'' என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். எனவே, 1950, ஜனவரி 26ஆம் நாளை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்'' என்று கூறியது சிட்டு.
""ஆனா, பிரிட்டிஷ் அரசின் சட்டத்தையே வைத்துக்கொண்டு ஆட்சி செய்தால் அதெப்படி சுதந்திர நாடாகும்? அதனாலேதான் நமக்கென்று ஓர் அரசியல் அமைப்புச் சட்டம் தேவைப்பட்டது. அதைத்தான் அந்தக் குடியரசு நாளில் நிறைவேற்றினோம்...'' என்றாள் மாலா பெருமையாக.
""அந்த நாளை நாம் மிக அருமையாகக் கொண்டாடுவோம்... குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு நல்லதோர் உரை ஆற்றுவார். பிரதமர், அமர்ஜோதி என்னும் இடத்தில் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார். நம் இந்தியப் படைகளின்  சிறப்பான அணிவகுப்பும் நடைபெறும். அதற்கு சிறப்பு விருந்தினராக வெளிநாட்டுத் தலைவர் யாரேனும் அழைக்கப்படுவார். அவர் இந்தக் கோலாகலமான கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்.  இந்த ஆண்டு கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பெயர்களைத்தான் முதலில் சொன்னேனே... மேலும் கடந்த ஆண்டு படைவீரர்கள் செய்த சிறந்த சேவைக்கான விருதுகளும், பதக்கங்களும்கூட வழங்கப்படுகின்றன. 
மாநிலங்களில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி காவலர் அணிவகுப்பைப் பார்வையிடுவார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.'' 
""சுருக்கமா, ரொம்பத் தெளிவா இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி நாங்க தெரிஞ்சுக்கிட்டோம்'' என்று அனைவரும் கூறினர்.
சிட்டு சிறகை விரிக்க... அதிலிருந்து சிறிய தேசியக் கொடிகள் நான்கு விழுந்தன. 
""இதை, உங்கள் சட்டையிலே குத்திக்கிட்டு குடியரசைக் கொண்டாடுங்க... நீங்களும் நாட்டுக்கு ஏதேனும் சேவை செய்யணும்கிற உறுதிமொழியையும் எடுத்துக்கோங்க... பை... பை...'' என்று பறந்து சென்ற சிட்டை அது புள்ளியாக மாறும் வரை பார்த்துக்கொண்டிருந்தனர் பிள்ளைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com