அங்கிள் ஆன்டெனா

எல்லா வரிக்குதிரைகளுக்கும் உடம்பில் வரிகள் இருக்கும்போது,  தாய் வரிக்குதிரை எப்படி தன் குட்டியை அடையாளம் கண்டு கொள்ளும்?
அங்கிள் ஆன்டெனா

எல்லா வரிக்குதிரைகளுக்கும் உடம்பில் வரிகள் இருக்கும்போது,  தாய் வரிக்குதிரை எப்படி தன் குட்டியை அடையாளம் கண்டு கொள்ளும்?

வரிக்குதிரைகள் தங்கள் குட்டிகளை 12-லிருந்து 14 மாதங்கள் வரை கருவில் சுமக்கின்றன. 12-ஆவது அல்லது 14-ஆவது மாதம்தான் குட்டி பிறக்கும். குதிரை ஒரு முறை ஒரு குட்டிதான் போடும். மிகவும் அபூர்வமாக இரட்டைக் குட்டிகள் பிறப்பதுண்டு. ஆனால், பிறக்கும் இரட்டைகளில் ஒன்று பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்துவிடும். வரிக்குதிரைகள் எப்போதும் குடும்பம் குடும்பமாகத்தான் வசிக்கும். எங்கே போனாலும் தங்களது குட்டிகளையும் பாதுகாப்பாக கூடவே (குறிப்பிட்ட காலம் வரை) வைத்துக் கொள்ளும். இதனால் குட்டிகளை அடையாளம் காண்பதில் அவற்றுக்குச் சிரமமே ஏற்படுவதில்லை. அப்படியில்லை என்றாலும், தங்கள் தங்கள் குட்டிகளை அடையாளம் கண்டுகொள்ள கடவுள் அவற்றுக்கு ஒரு வசதியை வைத்துள்ளார். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வகை (பேட்டன்) அதாவது வரிகளின் அமைப்பு உண்டு. அதை வைத்துத்தான் தாய்க் குதிரை தன் குட்டியை எளிதாக இனம் கண்டு கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com