புல்லைப் பார்த்து
பணிவைப் படி- அசையா
கல்லைப் பார்த்து
உறுதியைப் படி!
பூமியைப் பார்த்து
பொறுமை படி
மேகத்தைப் பார்த்து
கருணை படி
கடலைப் பார்த்து
வேகம் படி
கற்கும் கல்வியில் சிறக்க
ஆடிப் படி
நதியைப் பார்த்து
வாழப் படி
விதியை என்றும்
வெல்லப் படி
தோல்வியே துவள
துணிவைப் படி- உனை
தூக்கி உயர்த்தும்
வெற்றிப் படி