ஜப்பானியர்களைப் பற்றி அந்த நாளில் ஆங்கிலேயர்கள் நமக்கு விடுத்துள்ள அறிக்கையைப் பார்த்திருப்பீர்கள். (கொடுமைக்காரன்டி ஜப்பான்காரன் கொடுமைக்காரன்டி) ஜப்பானியர்கள் 2வது உலக யுத்தத்தில் தாய்லாந்து வழியாக இந்தியாவை நோக்கி முன்னெறி வந்தார்கள். இது தவிர கடல் வழியாக சிங்கப்பூருக்கும் வந்து சேர்ந்தார்கள்.
சிங்கப்பூரில் எதிர்ப்பு இல்லாமல் வெறும் சைக்கிளிலேயே அவர்கள் முன்னேறுவதைப் பாருங்கள்.
கடல் வழியே வருவது சுற்று வழி என்பதால் அவர்கள் தாய்லாந்து வழியே பர்மாவுக்குள் நுழைய விரும்பினர். ஏற்கெனவே ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், தோட்டத் தொழிலாளத் தமிழர்கள் என்று நிறைய பேரைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்கள். குறிப்பாக அவர்கள் வெள்ளைக்காரர்களைக் கொண்டு தாய்லாந்திலிருந்து பர்மாவுக்கு ரயில் பாதை போட முனைந்தார்கள்.
அதில் யுத்த கைதிகளுக்கு எந்தவித உணவையும் கொடுக்காமல் பட்டினி போட்டு வேலை செய்ய வைத்தார்கள். யுத்த கைதிகளை (18 வயதிலிருந்து 20 வயது வரை) அடித்து மிரட்டி வேலை செய்ய வைத்தார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான கைதிகள் இறந்துவிட்டார்கள்.
ரயில் பாதை முற்றுப் பெறாமலேயே போய்விட்டது. இந்த ரயில் பாதையை வரலாற்றில் "மரண ரயில்வே' என்று அழைத்தார்கள். இதில் இந்தியர்களை சற்று கௌரவமாக நடத்தினாலும் அவர்களும் பட்டினி கிடக்க வேண்டி வந்தது. சசிதரன் போன்ற மலேசிய தமிழர்கள் உயிர் தப்பி பிறகு நடந்த கொடுமைகளை எல்லாம் விவரித்து இருக்கிறார்கள்.
இந்த ரயில்வேயைப் பார்ப்பதற்காகக் "கஞ்சன்பரி' சென்றிருந்தேன். அங்குள்ள காட்சிகளைப் பார்த்துவிட்டுத்தான் எழுதுகிறேன்.
இந்த ரயில்வே என்ஜின் காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள இறந்த கைதிகளின் சமாதிகளைப் பார்த்தேன். நான் போனபோது சமாதியில் இறந்து போனவனின் வம்சத்தார் வந்து அழுது கொண்டே சமாதியை வணங்குவதையும் பார்த்தேன்.
இந்திய சமாதிகள் கேட்பாரற்ற நிலையில் உள்ளன.
ஒரு மரணப் பட்டியல்
ஜப்பானியர்கள் போட்ட மரண ரயில்வேக்காக
உயிரை விட்டவர்களின் பட்டியல் இது:நாடு மொத்தத் தொழிலாளர்கள் இறந்தவர்கள்
ஆசியத்தொழிலாளர்கள் 200,000 80,000
பிரிட்டிஷ் கைதிகள் 31,000 6,540
டச்சுக் கைதிகள் 18,000 2,830
ஆஸ்திரேலியக் கைதிகள் 13,000 2,710
அமெரிக்கக் கைதிகள் 700 2,710
ஒரு பொன்மொழி
நான் கடவுளை நேசிக்கிறேன். ஏனெனில் அவரை நான் மறுப்பதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.
-ரவீந்திரநாத் தாகூர்