சுடச்சுட

  
  men2

  எல்லோருக்கும் காதல் வரும். காதலின் நுட்பமான விரல் பிடித்து நடக்காதவர் யார் இங்கே? புறா மூலம் தூது அனுப்பி காதலியிடமிருந்து செய்தி வரும் வரை காத்திருந்த பழங்கால காதலுக்கும் மனசு நினைப்பதை அப்படியே எஸ்.எம்.எஸ்.ஸôக தட்டி விட்டு சில நிமிஷங்களில் பதில் வரவில்லை என்றால் துடிக்கும் தற்கால காதலுக்கும் என்ன வித்தியாசம்?

  காதலர்கள்தான் மாறியிருக்கிறார்கள். காதல் அப்படியேதான் இருக்கிறது. எல்லோரின் காதலும் இலக்கை அடைவதில்லை. சிலரின் காதலுக்கு இலக்கு  இருப்பதில்லை. சிலருக்குக் காதல் கைகூடும். சிலருக்கு..? நம்ம நாயகனும் காதலுக்கு போராடுகிறான். அது ஏன்? எப்படி முடிந்ததுன்னு சில முடிச்சுகளைப் போட்டு அவிழ்த்திருக்கேன்''- காதலாகப் பேசுகிறார் இயக்குநர் சாப்ளின். கரு.பழனியப்பனின் மாணவர். "உதயன்' படத்தின் மூலம் இயக்குநராகிறார்.

  இதோ இந்தச் சாலையில் கடந்து போகிற ஒரு சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் வங்கி மேனேஜருக்கும் காதல். பார்க்காத காதல், கடிதம் மூலம் காதல், டெலிபோனில் காதல் மாதிரி... இவங்களோட காதல், சொல்லாத காதல். தினமும் சந்திச்சுப்பாங்க. பார்த்துப்பாங்க. ஆனா பேசிக்க மாட்டாங்க. பேசிக்கிறப்ப ஒரு விஷயம் காதலை அப்படியே புரட்டிப் போட்டு தாக்குது. அதை எப்படி களைந்து வெற்றி கண்டார்கள் என்பதுதான் முழுக்கதை.

  எதார்த்த சினிமாக்கள்தான் அதிகமாக வருது, இப்போ கமர்ஷியல் நம்ப தகுந்ததா?

  காதல் வழக்கமான சினிமாவின் பாடுபொருள்தான். இலக்கியம், சினிமா, பாட்டுன்னு எல்லாவற்றிலும் காதலை ரசிக்கிற மனித மனசு, தன் வீட்டில் நடந்தா மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது ஆண்டாண்டு காலமாக காதலுக்கு இருக்கும் சாபம். இந்த வரிகளில் படத்துக்கான கதையும் இருக்கு.

  முழுசா கமர்ஷியல் படமா மட்டும் எடுத்துச் சொல்லவில்லை. அதேசமயம், கமர்ஷியல் சினிமாவுக்கான ஆடியன்ஸ் என்னைக்குமே இங்கு உண்டு என்பதையும் நான் மறக்கவில்லை. சினிமாவின் அடையாளமே கமர்ஷியல்தான். வருஷத்துக்குப் பத்து படங்கள் ஓடினால், அதில் கட்டாயம் 5 படங்கள் கமர்ஷியல் படங்களாக இருக்கும். இதோ இந்த தெருவில் பட்ஸ் விற்கிற பையனுக்கும், கர்சீப் விற்கிற பொண்ணுக்கும் ஒரு காதல்.

  அதை நீங்க எப்படி சொல்லுவீங்க? எதார்த்தம் இல்லாமல் அதைச் சொன்னால் எடுபடுமா? அது போல்தான் இதுவும். எதார்த்தமும் கமர்ஷியலும் கலந்த கலவை. எதார்த்தம் இல்லாத சினிமா என்றைக்கும் ஜெயிக்காது. அதற்காக கமர்ஷியலை விட்டுவிட முடியாது. அதனால் கமர்ஷியலும் இருக்கு. எதார்த்தமும் இருக்கு.

  "வம்சம்' படத்திலேயே கவனம் ஈர்த்திருந்தார் அருள்நிதி. இதில் அவர் எப்படி?

  அவர்தான் எனக்கு வாய்ப்பு தந்தாருன்னு சொல்லணும். "வம்சம்' படம் முடிச்சுட்டு, வேறு ஒரு கலரில் படம் செய்ய காத்திருந்தார். நிறைய கதைகள் கேட்டார். ஆனால் என் கதையில் ஏதோ ஒரு திருப்தி அவருக்கு. உடனே செய்து முடிச்சுடலாம்ன்னு கை குலுக்கினார். "வம்சம்' ரிலீசுக்குப் பின் சில நாள்களிலேயே வேலைகள் ஆரம்பமாகி விட்டன. கதையைக் கேட்டதும் அதுக்குள் போய் சட சடன்னு புகுந்து கொள்கிற பக்குவம் அருள்நிதிக்கு நிறைய உண்டு.

  சிட்டி சப்ஜெக்ட் என்றதும், இன்னும் ஆர்வம். "வம்சம்' முடிந்த பின்னரும் அவரால் அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலை. மிகவும் சிரமப்பட்டு கதைக்குள் வந்தார். அவரது உழைப்புக்கு நிச்சயம் இதில் மரியாதை இருக்கும்.

  ஹீரோயின் யாரு? கவனத்தை ஈர்க்குறாங்களே?

  இந்தப் படத்துக்கு அழகான, அதே சமயம் நடிக்கத் தெரிந்த ஒரு பொண்ணைத் தேடி அலைந்தேன்.

  சிலரிடம் அழகு மட்டுமே இருந்தது. ப்ரணிதா. கன்னட பொண்ணு. "பாவா', கன்னடத்தில் வெளிவந்த "போக்கிரி'ன்னு முடிச்சுட்டு அடுத்தடுத்த படங்களுக்குக் காத்திருந்தார். முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்த்தார். கதை சொன்னதும் என்னைக்கு சென்னை வரணும்ன்னு கேட்டார். முதல் நாள் ஷூட்டிங்கின் போதே யார் இந்தப் பொண்ணுன்னு எல்லோரும் வியப்பா கேட்டாங்க. நிச்சயம் தமிழ் சினிமா அவரை ஆராதிக்கும்.

  கதிரி கோபால்நாத் மகன் இசையில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறாராமே?

  இந்தப் படத்துக்கு இசை முக்கிய பலம். கதையைப் போலவே இசையும் பேசப்படும். கதிரிகோபால் நாத் மகன் மணிகான் கதிரி இசை. ஆர்வமான இளைஞன். ஒவ்வொரு பாடலும் ஒரு விதம். ஸ்ருதிஹாசனைப் பாட வைத்தால் என்னவென்று தோன்றியது.

  கேட்டதும் ஓ.கே. எப்போ ரெகார்டிங்ன்னு ஆர்வமாகிவிட்டார். ""எவன் இவன் ரகசிய காதலன்....'' எனத் தொடங்கும் பாடலுக்கு இவங்க ரெண்டு பேரும்தான் பொறுப்பு.  விஜய்மில்டன் கேமரா. படத்தின் அழகியலுக்கு இவர் மட்டுமே பொறுப்பு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai