Enable Javscript for better performance
செண்பகராமன் பிள்ளை- Dinamani

சுடச்சுட

    
    sk9

    இவரை "செம்பக்' என்றும் அழைப்பார்கள். இவர் 1891-ல் பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் சின்ன ஸ்வாமி பிள்ளை. அவர் திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். தாயார் பெயர் நாகம்மாள்.

    திருவனந்தபுரத்தில் செண்பகராமன், உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். பையனாக இருக்கும் போதே சர் வால்டர் ஸடிரிக்லாண்டைச் (பிரிட்டிஷ் பயாலஜிஸ்ட்) சந்தித்தார்.

    செண்பகராமனின் உறவினர் பத்மநாபப் பிள்ளையும் அந்தப் பிரிட்டிஷ்காரருக்கு நெருங்கிய நண்பரானார்.

    வால்டர், கப்பலில் அவருடைய நாட்டுக்குத் திரும்பியபோது, செண்பகராமனையும் பத்மநாபப் பிள்ளையையும் தம்முடனேயே அழைத்துச் சென்றார். ஆனால் பத்மநாபப் பிள்ளை கொழும்பு போனவுடன் கப்பலில் இருந்து இறங்கி திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். செண்பகராமனுக்கு அப்போது வயது பதினைந்து. அவர் பிரயாணத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் இறங்கினார். அவரை வால்டர் அங்குள்ள பள்ளியில் சேர்த்து உயர்நிலைப் படிப்பை முடிக்க வைத்தார். பிறகு, செண்பகராமன் ஓர் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து என்ஜினீயரிங் படிப்பில் டிப்ளமா பெற்றார்.

    முதல் உலகப் போர் நடந்த போது ஜிரிஸ்டின் சர்வதேசிய இந்தியக் கமிட்டியை 1914-ல் செண்பகராமன் உண்டாக்கினார். அவரைப் போன்ற எண்ணம் கொண்ட இந்தியர்களும் அங்கே இருந்தனர்.

    சரோஜினி நாயுடுவின் மூத்த சகோதரர் வீரேந்திர நாத் சட்டோபாத்யாயா, மகாத்மா காந்தி இவர்களுடன் சேர்ந்து இந்திய தேசியக் காங்கிரûஸ ஐரோப்பாவில் உண்டாக்கினார்.

    அதில் சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தாவும் சேர்ந்திருந்தார்.

    இந்தியன் விடுதலை கமிட்டியை ஆம்ஸ்டர்ம்ஸ், ஸடாக் ஹோம் நகரங்களிலும் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டனிலும் ஆரம்பித்தார்கள்.

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வியன்னாவுக்கு வந்தபோது செண்பகராமன் அவரிடம் தமது திட்டங்களை விளக்கினார். ஹிட்லர், இந்தியர்கள் ஆட்சி பொறுப்பை நடத்துவதற்கு தகுதி அற்றவர்கள் என்று கூறியபோது செண்பகராமன் அவருக்குக் கடிதம் எழுதி அவரை மன்னிப்பு கேட்கும்படி செய்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜெர்மனியர்கள் பின்னால் இந்திய சுதந்திரத்தில் அதிக நாட்டம் காட்டவில்லை.1931-ல் மணிப்பூரைச் சேர்ந்த லஷ்மிபாயை பெர்லினில் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார் செண்பகராமன்.

    ஹிட்லரின் அடியாட்களால் 1934}ம் வருடம் உணவில் விஷம் கலந்து கொல்லப்பட்டார் என்று செய்தி கூறுகிறது. பிள்ளைக்குத் தனது அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் இறுதி ஆசையாக இருந்தது. அவர் இறந்த பிறகு அவர் மனைவிக்கு எண்ணற்ற கஷ்டங்களை ஜெர்மானியர்கள் கொடுத்தார்கள்.

    எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்ட செண்பகராமனின் மனைவி மும்பை வந்து சேர்ந்தார். செண்பகராமனின் அஸ்தியையும் அவரது டயரிகளையும் சில ரகசிய தஸ்தாவேஜுகளையும் கொண்டு வந்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய கடற்படை அவரது அஸ்தியை 1966-ல் கொச்சிக்கு எடுத்துச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai