சுடச்சுட

  
  sk5

  சுதôவாக "மகள்' தொடரிலும், சுவாதியாக "முந்தானை முடிச்சு'  தொடரிலும் நடித்து வரும் துர்கா. அடுத்து மூன்று வேடங்களில் ஒரு தொடரில் பரபரப்பாக நடித்துக்

  கொண்டிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..    "மகள்' தொடரில் சுதாவாக நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

  "மகள்' தொடரில் எங்கள் குடும்பம் பரம ஏழ்மையான குடும்பம். செருப்புத் தைக்கும் தொழிலாளியின் தங்கை நான். அதனால் பணத்தின் மீது அதிக ஆசைப்படும் ஓர் அப்பாவியான பெண்ணாக வருவேன்.  எனக்கு ஜோடியாக பாலாஜி  நடிக்கிறார். என் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி என்னை ஏமாற்ற நினைப்பார் பாலாஜி. என் அண்ணனை ஒரு பணக்கார வீட்டு பெண் காதலிப்பாள். அவர்கள் காதலைச் சேர்த்து வைக்க முயற்சி செய்கிற மாதிரியான கேரக்டர். இந்தத் தொடரில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 

  "முந்தானை முடிச்சு' தொடர் பற்றி?

  "முந்தானை முடிச்சு' தொடர்,  நான்கு அக்கா தங்கைகளின் கதை. அந்த நான்கு பேரில் நான்தான் கடை குட்டி, என் பேரு சுவாதி. மாமியார் வீட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போகிற அன்பான மருமகள் கேரக்டர் எனக்கு. அந்தத் தொடரில் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. நான் இதுவரை நிறையத் தொடர்களில் நடித்திருக்கிறேன். ஆனால் முந்தானை முடிச்சு தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு, எனக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நிறையப் பேர் சுவாதி கேரக்டரைப் பற்றிப் பேசுகிறார்கள்.    எத்தனை வருடங்களாக தொடரில் நடிக்கிறீர்கள். எப்படி இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

  என்  தம்பி குழந்தை நட்சத்திரமாக  நிறைய தொடர்களிலும், படங்களிலும் நடித்திருக்கிறார். தம்பி  சூட்டிங்குக்குப் போகும் போது  நானும் அடிக்கடி கூட போவேன். அங்கே அவர்கள் நடிப்பதை எல்லாம் பார்த்துப்  பார்த்து எனக்கும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அந்த நேரத்தில் தான் ஜீ தமிழ் சேனலில் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிகை சொர்ணமால்யாவின் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து நான்கு வருடங்களாக நடித்து வருகிறேன். "சௌந்தரவல்லி', "உறவுக்குக் கைகொடுப்போம்' போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறேன்.

  வேறு என்ன  தொடர்களில்  நடிக்கிறீர்கள்?

  ராஜ்டிவியில் ஒளிப்பரப்பாகும் "கொடிமுல்லை' தொடரில் நடித்து வருகிறேன். இதைத் தவிர  "ஒன்றாய் இரண்டாய்' என்ற திரை படத்தில் நடித்து வருகிறேன்.

  அதையடுத்து தற்போது புதிதாக உருவாகி வரும் ஒரு மெகா தொடருக்காக மூன்று வேடங்களில் நடித்து வருகிறேன்.  அந்தத் தொடரின் கதாநாயகியும் நான்தான். வில்லியும் நான் தான். இன்னொன்று மென்மையான ரோல். ஆனால் அந்தத் தொடர் எந்த சேனலில் வரப் போகிறது என்று இன்னும் முடிவாகவில்லை. அந்தத் தொடரை, சௌந்தரவல்லி, கர்ணமஞ்சரி, அம்மன் போன்ற தொடர்களை இயக்கிய ஆர்.கே. இயக்கு

  கிறார்.  ஒரே  நேரத்தில்  மூன்று வேடங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு  கதாபாத்திரத்திற்கும் உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?

  இயக்குநர்  ஒவ்வொரு கதாபாத்திரத்தைப்  பற்றிச் சொல்லும் போதும் பாஸிட்டிவ்வான கேரக்டரா, வில்லத்தனமான  கேரக்டரா என்பதை  முதலில் உள்வாங்கிக்  கொள்வேன். ஷாட்டில் போய்  நிற்கும்போதே அந்தக் கேரக்டராகத்தான் நிற்பேன்.  அதுவுமில்லாமல் ஒவ்வொரு கேரக்டரையும் மாற்றி மாற்றித் தான் எடுப்பார்கள். ஒரு கேரக்டருக்கு மேக்கப் போடும்போது அந்தக் கேரக்டராக என்னை மாற்றி கொள்வேன். 

  உங்களைப் பற்றி?

  எனக்கு தாய் மொழி சிந்தி.  ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான்.  அப்பா ஜி.லக்ஷ்மணன் எல்.ஐ.சி ஏஜண்டாகப் பணிபுரிந்து வருகிறார். அம்மா குடும்பத் தலைவி. ஒரு தம்பி, அவரும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai