தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தபோதும், அதன் மீது மோகம் குறையவில்லை. குறிப்பாக தென்னிந்திய மக்களின் விசேஷங்கள், சடங்குகள் என அனைத்திலும் தங்கம் முக்கியப் பொருளாகக் கருதப்படுகிறது. மக்கள் ஆபரணங்களுக்கு மட்டுமல்லாமல் சேமிப்புக்காகவும் தங்கம் வைத்திருக்கிறார்கள். பொதுவாக தங்கம் வாங்குவது இந்தியர்களின் கலாசாரமாகிவிட்டது. இந்தக் காரணங்களினால்தான் இந்திய மக்களிடம் அதிக தங்கம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்தம் 18 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதன் மதிப்பு ரூ.48.4 லட்சம் கோடி. உலக தங்க இருப்பில் இது 11 சதவீதம் ஆகும். தங்கம் வாங்குவதில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் இறக்குமதியில் கச்சா எண்ணெய், மூலதனப்பொருள்களுக்கு அடுத்து தங்கம்தான் உள்ளது.