ஒரு சமயம் கூட்டம் ஒன்றில் பெர்னாட்ஷாவைப் புகைப்படம் எடுக்க ஒருவன் வந்தான். புகைப்படம் எடுத்துவிட்டு, ""நாளை படத்தை அனுப்புகிறேன்'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
அடுத்த நாள் புகைப்படத்துடன் ஒரு கடிதமும் வந்தது. அதில் "நான் எடுக்கும் படங்களுக்குக் குறைந்த கட்டணம் 200 ரூபாய். உடனே பணத்தை அனுப்பி வைக்கவும்!' என்று எழுதியிருந்தது. பெர்னாட்ஷா அதைப் படித்தார். ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தார். அதில் தன் கையெழுத்தைப்போட்டு, "என் கையெழுத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்பென்று பலரும் கூறுகிறார்கள். எனவே இத்துடன் அனுப்பியுள்ள துண்டு சீட்டைப் பெற்றிடுவீர்:
200 ரூபாய் போக மீதமிருக்கும் பணத்தை உடனே அனுப்பி வைப்பீர்!' என்று கடிதம் எழுதி அனுப்பினார். அதற்குப் பிறகும் புகைப்படம் எடுத்தவன் பதில் எழுதுவானா என்ன?