ஓர் இளைஞனின் குடிசை வாசலுக்கு குளிரில் நடுங்கிக்கொண்டே வந்த வயதான முதியவர் இளைஞனை<> பார்த்து, ""இன்று இரவு மட்டும் நான் உன் குடிசையில் தங்கிக்கொள்ளலாமா?'' என்று கேட்டார்.
உடனே இளைஞன், ""நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?'' என்று கேட்டான்.
அதற்கு முதியவர், ""இல்லை. நான் இயற்கையை மட்டுமே வணங்குபவன்'' என்றார்.
""அப்படியென்றால் முதலில் வெளியே போ'' என்று முதியவரை விரட்டிய இளைஞன் குடிசையை மூடிவிட்டு<> படுத்தான்.
அவன் கனவில் கடவுள் தோன்றி, ""80 ஆண்டுகளாக என்னை நம்பாத ஒருவனை நான் வாழவைக்கும்போது, நீ ஓர் இரவு தங்க வைக்கக்கூடாதா?'' என்று கேட்டாராம். மனிதநேயம்தான் சிறந்த மதம் என்று அப்போது அந்த இளைஞன் புரிந்துகொண்டான்.