
• நமது நாட்டின் தேசிய கீதமாக ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜனகனமன' பாடல், 1950-ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
• தேசிய கீதத்தைப் பாட 52 விநாடிகள் ஆகும்.
• தேசிய கீதத்திற்கு வங்காள மொழியில் "பாரத விதாதா' என்று பெயர்.
• தேசிய கீதத்திற்கு ஆங்கிலத்தில் "தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா' என்று பெயர்.
• எந்த சமயத்திலும் நமது தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
• தேசிய கீதம் பாடும்போது ஆடாமல்
அசையாமல் தலைநிமிர்ந்து
நிற்கவேண்டும்.