அஞ்சநாத்ரி குன்று!

கர்நாடகாவில் ஹம்பி நகருக்கு அருகே ஆனேகுந்தே உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அஞ்சநாத்ரி குன்று உள்ளது. இங்கு என்ன சிறப்பு?
அஞ்சநாத்ரி குன்று!

கர்நாடகாவில் ஹம்பி நகருக்கு அருகே ஆனேகுந்தே உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அஞ்சநாத்ரி குன்று உள்ளது. இங்கு என்ன சிறப்பு?
 இந்தப் பகுதிக்கு ராமாயணத்துடன் தொடர்பு உண்டு. ஆமாம். இதுதான் ஒருகாலத்தில் கிஷ்கிந்தை. வாலியினால் விரட்டப்பட்ட சுக்ரீவன். மந்திரி அனுமனுடன் வந்து தங்கியது ரிஷிமுக் குன்று!
 அனுமன் பிறந்தது அஞ்சநாத்ரியில்தான் என்றும், அனுமனின் தாயார் பெயரே அஞ்சனா தேவி எனவும் ராமாயணத்தில் கூறப்படுகிறது. இந்தக் குன்றின் உச்சியில் இன்றும் அனுமன் கோயில் உள்ளது. உள்ளே அனுமன் சிலையும், தாயார் அஞ்சனாதேவி சிலையும் உள்ளன. சுமார் 1060 படிகள் ஏறி உச்சியை அடைய வேண்டும். சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகம் வரும். மற்ற நாள்களில் 100 பேர் வரை வருவர். இங்கு படிகளில் ஏறும்போதும், கோயிலினுள்ளும் குரங்குகளின் தொந்தரவு அதிகம் உண்டு!
 சமீபத்தில் ஒரு பிரபல தலைவரின் மனைவி இங்கு திடீர் விஜயம் செய்தார்.
 ஆமாம்! நமது இந்தியப் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் சமீபத்தில் இங்கு இருமுறை வந்து சென்றுள்ளார். முதல் தடவை மோடி ஜெயித்ததும்! இரண்டாவது முறை அவர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு சில நாள்கள் முன்பும் இரண்டாவது தடவையாக வந்தபோது கவனிக்கப்பட்டுவிட்டார்!
 அனுமனிடம் மனமார பிரார்த்தனை செய்து சென்றார். உடனே திடீரென சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நூறிலிருந்து ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. இதனால் இப்போது பாதையைச் சரிசெய்வதுடன், குரங்கு நடமாட்டத்தையும் குறைக்க முயற்சி நடக்கிறது. இந்தப் பகுதி 3000 மில்லியன் ஆண்டுகள் பழையது. ஆக பூமித்தாயின் இடம் இது என ஆராய்ச்சியாளர்களின் கருத்து!
 ஹம்பிக்கு சுற்றுப்பயணம் வருபவர்கள் தற்போது 1060 படிகள் ஏறி இந்த அனுமனையும் தரிசித்து விட்டுத்தான் செல்கிறார்கள். துங்கபத்ரா நதியை ஒட்டிய இந்தப் பகுதிக்கு பம்பா சரஸ் எனவும் பெயருண்டு. இதன் உச்சியில் நின்று, பலர் சூரிய அஸ்தமனம் பார்ப்பர்.
 உச்சியிலிருந்து இடது பக்கத்தில் கோப்பல் ஜில்லாவும் வலது பக்கம் பெல்லாரி ஜில்லாவும் உள்ளது. இந்தக் கோயிலை ஒரு பாபாவும் அவரது சிஷ்யர்களும் பராமரிக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com