Enable Javscript for better performance
மகாமஸ்தக்  அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    மகாமஸ்தக்  அபிஷேகம்

    By dn  |   Published on : 08th February 2015 09:42 AM  |   அ+அ அ-   |    |  

    1

    ஜைன மதத்தின் தாக்கம் தென்னிந்தியாவில் குறைவு எனக் கூறப்பட்டாலும் கர்நாடகாவில் இன்றும் பல ஜைன மதக் கோயில்கள் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் பிரபலமானது சரவண பெலகோலா. இங்கு கோமடேச்வரர் 57 அடி உயரத்தில், மத வழக்கப்படி, நிர்வாணக் கோலத்தில் காட்சி தந்து பார்ப்பவர்களை வியக்க வைக்கிறார்!
     கர்நாடகத்தில் உள்ள இந்தத் தலத்திற்கு மைசூர் - ஹாசன் கிழக்காக 50 கி.மீட்டர் பயணிக்க வேண்டும். பெங்களூரிலிருந்து சுமார் 160 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.இந்திரகிரி மலையில் சரவண பெலகோலா கோமடேச்வரர் பிரதிஷ்டை செய்த காலம் கி.பி. 978 - 993-ஆம் ஆண்டுகளில்! சுமார் 500 படிகளுக்கு மேல் ஏறினால் நல்ல தரிசனம் கிடைக்கும். இந்த சிலைக்கு கீழே அருகில் "பெலகோலா' என்ற பெரிய வெள்ளைக்குளம் உள்ளது.
     குல்லதயாஜி என்ற பக்தை, ஒரு சிறு குடுக்கையில் பாலை எடுத்து வந்து கோமடேச்வரருக்கு அபிஷேகம் செய்தாராம். அந்த பால் பெருகி, பெருகி கீழே பெரிய குளமாய் தங்கிவிட்டதாம். இதனைத்தான் பெலகோலா என அழைக்கின்றனர். இந்திரகிரி மீது அமர்ந்துள்ள கோமடேச்வரரைச் சுற்றி ஒரு கோட்டையைப் போன்று சுவர் எழுப்பியுள்ளனர். முதலில் சிறு கோயில். அதனுள் (21)
     தீர்த்தங்கரர்களுடைய வடிவங்கள் அமர்ந்த நிலையில். கோயில் வாசலில் இரண்டு ஸ்தம்பங்கள். மூன்று கருவறைகள் உள்ளன. அவற்றில் ஆதிநாதர், நேமிநாதர் மற்றும் ரிஷப நாதர் ஆகியோர் உள்ளனர்.
     ஆதிநாதர்தான் பாகுபாலியின் தந்தை. யார் இந்த பாகுபாலி? கோமடேச்வரர்தான் பாகுபாலி..! ஆதிநாதருக்கு விருஷதேவர் எனவும் பெயருண்டு. இவருக்கு இரு குழந்தைகள். மூத்தவன் பரதன். இளையவன் பாகுபாலி. தந்தை, பரதனை ஆட்சியில், அமர வைத்தாலும், தம்பி பாகுபாலியால் தனக்குப் பிரச்னை வருமோ என சண்டையிட்டு அவனைக் கொல்லப் பார்த்தான்..!
     பாகுபாலியோ ""எனக்கு ராஜ்யமே வேண்டாம். நீயே வைத்துக்கொள். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்கிறேன்' என காட்டிற்குச்
     சென்றுவிட்டார்.
     பல வருடங்கள் கழித்து இவர் பல ஜைன தலைவர்களுக்குக் காட்சி தந்து பல அதிசயங்களை நிகழ்த்தினார். இதனால் பாகுபாலி மிகவும் பிரபலம். அந்த வகையில் சவுண்டராயர் என்பவர்தான் கோமடேச்வரரை பிரதிஷ்டை செய்தவர். இச்சிலை, ஒரே கல்லால் ஆனது. பலர் இது மலையைக் குடைந்து உருவான சிலை என்கின்றனர். இந்த கோமடேச்வரரின் நெஞ்சு அகண்டது. 24 அடி கொண்டது. கோயில் வாசலில் பால்குளம் அமையக் காரணமான குல்லதயாஜிக்கு சிலை உள்ளது. அர்ச்சனை, ஆராதனைகள் உண்டு.
     கோமடேச்வரருக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமஸ்தக் என்னும் அபிஷேகம் நடக்கிறது. கடைசியாக 2012-இல் ஜனவரி - பிப்ரவரியில் நடந்தது. இனி அடுத்து
     2025-இல் நடக்கும்!
     
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp