இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

விசாரணை கைதி

வி.ஜி. சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நா. வெங்கடேசன் தயாரித்து வரும் படம் 'விசாரணை கைதி'.

News image
Updated On :24 மே 2026, 4:10 am IST

வி.ஜி. சினி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நா. வெங்கடேசன் தயாரித்து வரும் படம் 'விசாரணை கைதி' . கதாநாயகனாக உன்னிகிருஷ்ணனும், கதாநாயகியாக வைஷ்ணவியும், தவிர நிரித்விகா, ஷ்ரயோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ். ஆர். மணிகண்டன். ஒளிப்பதிவு இயக்குநராக சந்திரன் சாமி பணியாற்றுகிறார். படத்தொகுப்பை ராஜேந்திரன் கவனிக்கிறார். இசையமைப்பாளராக நரேஷ் பணியாற்றுகிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'ஒரு சிறிய கிராமத்தில் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. எதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது? இதன் பின்னணி என்ன? மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத கொலைகள் எதற்காக நடக்கிறது? என சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு குற்றமும், அந்தக் குற்றத்தைச் செய்யக்கூடிய அம்சங்களும்தான் அதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது, அது அந்த மனிதர்களை எங்கே நிறுத்துகிறது, அதன் விளைவுகள்தான் என்ன என்பதுதான் பேசுபொருள்.

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ... கெட்டதோ சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கையின் போக்கும் மாறிவிடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். சினிமாவின் வழக்கமான பார்வைதான். அதைத் தாண்டிய சுவாரஸ்யங்கள் இங்கே ஒளிந்து கிடக்கின்றன. இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ளது'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.