பூதஞ்சேந்தனார்
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே,
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே,
வாய்ப்பு உடையராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது. (பாடல் - 6)
இயன்ற அளவு ஈகை செய்தல் நல்லது. நல்லோர் அறிவுறுத்தும் பயனுள்ள மொழிகள் இனியது. பல்வேறு வாய்ப்புகள் பெற்றிருந்தபோதும், தீயன செய்ய நாணமுடையோரைப் பாதுகாப்பாகக் கொண்டிருத்தல் இனியது.