சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால்படும்
கற்றா உடையான் விருந்து. (பாடல்-38)
சிறிய காலாட்படையை உடையவனாக இருந்தாலும், வலிமை வாய்ந்த ஆயுதப் படையைப் பெற்றிருத்தல் இனியது. நண்பர்களையும், உறவினர்களையும் உடையவனாக இருப்பினும், பகைவரை வெல்லுதல், ஆண்மை உடையவனாக இருத்தல் இனியது. பசுக்களையும், கன்றுகளையும் நிரம்பப்பெற்று விருந்தோம்பும் பண்புடையவனாக இருத்தல் இனியது.