சுடச்சுட

  

  கச்சிக்கலம்பகம்

  காஞ்சி ஏகாம்பரநாதர் மீது பாடப்பட்ட பிரபந்தம். இப்பெயரால் இருவர் பாடியுள்ளனர். ஒருவர் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஞ்சி ஞானப்பிரகாசர். மற்றொருவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூண்டி ரங்கநாத முதலியார்.

  கடம்பவன புராணம்

  மதுரை மாநகரைப் பற்றிய தலபுராணம். இதை வீமநாத பண்டிதர் என்பர் பாடியுள்ளார். முன்னர் கடம்பக் காடாய் இருந்து பின் மதுரை என்ற பெயர் பெற்றமைக்குரிய காரணங்களை இதன் மூலம் அறியலாம். காலம் கி.பி.20-ஆம் நூற்றாண்டு.

  கந்தபுராணம்

  இந்நூல் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்டது. முருகப் பெருமான் "திகடச் சக்கரம்' என்று தொடங்கிக் கொடுக்க அதனையே முதலாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். இது உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது. இது 10346 செய்யுள்களைக் கொண்டது. முருகப்பெருமானின் வரலாற்றை அறிவிக்கும் விரிவான நூல். இது சைவசமயத்தின் சிறப்பையும் சிவ பரத்துவத்தையும் பல நீதிகளையும் கொண்டு திகழ்வது. காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு.

   

  கச்சியப்ப சிவாசாரியார் தினம் தினம் பாடல்களைப் பாடிக் குமரப் பெருமான் திருவடிகளில் வைத்துத் திருக்கோயிலைத் தாழிட்டுச் சென்று மறுநாள் கோயிலைத் திறந்து அப்பாடலைப் பார்க்கும்போது, அப்பாடல்கள் முருகப்பெருமானால் திருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுவதால் இந்நூலின் பெருமையினை மேலும் கூற வேண்டியதில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai