சுடச்சுட

  

  (ர, ற பொருள் வேறுபாடு)

  இரை -ஒலி, உணவு

  இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை

  இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்

  இறு - ஒடி, கெடு, சொல்லு

  இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்

  இறும்பு - வண்டு, சிறுமலை

  இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்

  இறுப்பு - வடிப்பு

  இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்

  இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்

  இருக்கு - மந்திரம், ரிக் வேதம்

  இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு

  இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்

  இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு

   

  உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்

  உறவு - நட்பு, சுற்றம், எறும்பு

  உரவோர் - அறிஞர், முனிவர்

  உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்

  உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி

  உறி - உறிவெண்ணெய், தூக்கு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai