சுடச்சுட

  

  கந்தரந்தாதி

  இந்நூல் வில்லிபுத்தூராருக்கும் அருணகிரிநாதருக்கும் கல்வி தொடர்பான வாதம் நடந்தபோது அருணகிரிநாதரால் பாடப்பட்ட நூல் என்பர். இதிலுள்ள பாடல்கள் மடக்கு என்னும் அணியால் அமைந்தவை. இவற்றுக்கு வில்லிபுத்தூரார் உரை கூறிக்கொண்டு வந்தும், "திதத்தத்த' என்று தொடங்கும் திருப்பாடலுக்குப் பொருள் கூற இயலாது விழித்தார் என்பர். இதில் 100 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குரிய உரை வில்லிபுத்தூராருடையது என்பது ஆன்றோர் துணிபு. இந்நூலின் காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டு.

  கந்தர் கலிவெண்பா

  குமரகுருபர சுவாமிகளால் பாடப்பட்டது. குமரகுருபரர் ஐந்து வயது வரை ஊமையாக இருந்தார். இதனைக் கண்ட பெற்றோர் திருச்செந்தூரை அடைந்து முருகனை வேண்ட, முருகன் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது. அத்தருணம் இந்த நூலைப் பாடியருளினார் குமரகுருபரர். முருகனது பிறப்பு வளர்ப்பு பெருமை முதலியவற்றை இந்நூல் அழகுபடக் கூறுகிறது. சைவ சித்தாந்தக் குறிப்புகளும் இதில் உள்ளன. இதைப் பயிலும் மாணவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai