சுடச்சுட

  

  கம்பராமாயணம்

  கவிச்சக்கரவர்த்தி கம்பரால் பாடப்பட்டது. இராமபிரானின் வரலாற்றைக் கூறும் நூல். மூல நூலான வால்மீகி ராமாயணத்தை தழுவி எழுதப்பட்ட வழி நூல் இது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களை உடையது. காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு.

  கயாகரர் நிகண்டு
  இது பழைய நிகண்டுகளுள் ஒன்று. கயாகரர் என்பவரால் இயற்றப்பட்டது. நிகண்டு என்பது சொற்களுக்குப் பொருள் உணர்த்தும் நூல். இக்காலத்து அகராதி போன்றது. ஆனால், செய்யுள் அமைப்பில் பொருளை அறிவிக்கும் முறையில் அமைந்துள்ளது. இதன் காலம் அறுதியிட்டுக் கூறப்படவில்லை.

  கலிங்கத்துப்பரணி
  இது ஜெயங்கொண்டார் என்பவரால் பாடப்பட்டது. பரணி என்பது போரில் 1000 யானைகளைக் கொன்ற வீரனைப் பற்றிப் பாடப்படும் நூல். முதல் குலோத்துங்கன் கலிங்கத்தை வென்ற வெற்றிச் சிறப்பைக் கூறுகிறது. இதில் 13 பகுதிகளும், 596 தாழிசைகளும் உள்ளன. ஒவ்வொரு தாழிசையையும் புலவர் பாடி, மன்னனுக்குப் பொருள் விரித்தபோது, அதைக் கேட்ட குலோத்துங்க சோழன், ஒவ்வொரு பொன் தேங்காயை உருட்டி புலவரைச் சிறப்பித்தான் என்று கூறுவர். காலம் கி.பி.11-ஆம் நூற்றாண்டு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai