Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் கலாரசிகன்

  By dn  |   Published on : 30th December 2012 12:47 AM  |   அ+அ அ-   |    |  

  சென்​னை​யில் இசை​விழா உச்​ச​கட்​டத்தை நெருங்​கிக் கொண்​டி​ருக்​கும் நேரம்.​ இது​போல ​ ஆண்​டுக்கு ஒரு​முறை உல​கெங்கி​லி​ருந்​தும் ரசி​கர்​க​ளும் கலை​ஞர்​க​ளும் ஓரி​டத்​தில் கூடி ஒரு மாதம் முழு​வ​தும் இசை​யும்,​​ நட​ன​மும்,​​ நாட​க​மு​மாக விழா நடத்​தப்​ப​டு​வது நமது தரும மிகு சென்​னை​யில் மட்​டும்​தான்.​ ஏனைய இடங்​க​ளில் நடத்​தப்​ப​டும் கலை விழாக்​கள் ஓர் அரங்​கத்​திலோ,​​ பகு​தி​யி​லோ​தான் நடக்​கும்.​ இங்கு மட்​டும்​தான் இசை​விழா சென்​னை​யில் எல்​லாப் பகு​தி​க​ளி​லும் பர​வ​லாக நடை​பெ​று​கி​றது.​

  ÷அரை நூற்​றாண்​டுக்கு முற்​பட்ட இசை விழா நிகழ்ச்​சி​க​ளுக்​கும் இன்​றைய நிகழ்ச்​சி​க​ளுக்​கும் ஒரு மிகப்​பெ​ரிய வேறு​பாடு உண்டு.​ அப்​போது இசை​விழா மேடை​க​ளில் அபூர்​வ​மாக மட்​டுமே ஒலித்​துக் கொண்​டி​ருந்த தமிழ் சாகித்​யங்​கள் இப்​போது பர​வ​லாக இசைக்​கப்​ப​டு​வ​து​டன்,​​ முக்​கி​ய​மான பங்​கை​யும் வகிக்​கின்​றன.​ மூத​றி​ஞர் ராஜாஜி,​​ செட்​டி​நாட்​ட​ர​சர் ராஜா சர் அண்​ணா​மலை செட்​டி​யார்,​​ "ரசி​க​மணி' டி.கே.சிதம்​ப​ர​நாத முத​லி​யார் போன்​ற​வர்​கள் அறு​பது ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் தொடங்​கிய தமி​ழிசை இயக்​கத்​தின் கார​ண​மா​கத்​தான் இத்​த​கைய மாற்​றம் ஏற்​பட்​டி​ருக்​கி​றது என்​பதை நாம் நினை​வு​கூ​ரக் கட​மைப் பட்​டி​ருக்​கி​றோம்.​

  ÷18-ஆம் நூற்​றாண்​டி​லேயே தமிழ் சாகித்​யங்​கள் இயற்​றப்​பட்​டு​விட்​டன என்​ப​தும்,​​ கர்​நா​டக இசை​யின் மும்​மூர்த்​தி​க​ளில் ஒரு​வ​ரான சியாமா சாஸ்​தி​ரியே கூட தமி​ழில் ஐந்து பாடல்​களை இயற்றி இருக்​கி​றார் என்​ப​தும்,​​ இசை மேடை​க​ளில் தமிழ் சாகித்​யங்​க​ளும் பர​வ​லா​கக் கையா​ளப்​பட்​டது என்​ப​தற்கு சான்று பகர்​கின்​றன.​ "தின​மணி' வெளி​யிட்​டி​ருக்​கும் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா மலர்,​​ தமி​ழி​சைச் சிறப்பு மல​ராக மலர்ந்​தி​ருக்​கி​றது.​ அதில் கி.பி.​ 1700 முதல் ​ தமி​ழில் பாடல்​கள் இயற்​றிய,​​ அதி​கம் பிர​ப​ல​மா​காத

  சாகித்​ய ​கர்த்​தாக்​கள் பற்​றிய குறிப்பு "தமி​ழிசை முன்​னோ​டி​கள்' என்ற பெய​ரில் வெளி​யி​டப்​பட்​டுள்​ளது.​

  ÷க​டந்த நூற்​றாண்​டில் வாழ்ந்த தமி​ழிசை முன்​னோ​டி​க​ளுள் ஆபி​ர​காம் பண்​டி​தர் குறிப்​பி​டத்​தக்​க பங்​க​ளிப்பு நல்​கி​ய​வர்​க​ளில் ஒரு​வர்.​ நெல்லை மாவட்​டம் சாம்​ப​வார் வட​க​ரை​யில் 1859-ஆம் ஆண்டு முத்​து​சாமி நாடா​​ரின் மக​னா​கப் பிறந்த ஆபி​ர​காம் பண்​டி​தர் கர்​நா​டக இசை​யின் ஆர்​வ​ல​ராக மாறி​யது எப்​படி என்று யாரும் வியப்​ப​டை​யத் தேவை​யில்லை.​ அவர் மருத்​து​வம்,​​ புகைப்​ப​டக் கலை,​​ சோதி​டம் ஆகி​ய​வற்​றி​லும் தேர்ச்சி பெற்​றி​ருந்​தார் எனும்​போது, அந்த மனி​த​ரின் பன்​மு​கப் புல​மையை நாம் புரிந்​து​கொள்ள முடி​கி​றது.​ அத்​து​டன் நின்​று​வி​ட​வில்லை அவர்.​ விவ​சா​யத்​தி​லும் ஈடு​பட்​டுப் பல புது​மை​க​ளைச் செய்​தார்.​ ​

  ​ ஆபி​ர​காம் பண்​டி​தர் திண்​டுக்​கல் சடை​யாண்டி பத்​த​ரி​டம் பயின்ற இசைக் கலை​யைத் தஞ்​சைக்கு இடம் பெயர்ந்​த​போது ஒரு நாக​சுர வித்​வான் மூலம் வளப்​ப​டுத்​திக் கொண்​டார்.​ இசை ஆய்​வு​க​ளில் ஈடு​பட்​ட​து​டன்,​​ தஞ்​சை​யில் இசை ஆய்வு மாநா​டு​களை நடத்​திய பெரு​மை​யும் அவ​ருக்கு உண்டு.​

  ÷அ​வர் கிறிஸ்​தவ மதத்​தில் ஈடு​பாடு கொண்​ட​வர் என்​ப​தால்,​​ அவர் இயற்​றிய பாடல்​கள் அனைத்​தும் இயே​சு​நா​தர் மீது அமைந்த​தில் வியப்​பில்லை.​ ராம பக்​தி​யால் தியா​கய்​யர் ராம​பி​ரான் மீதும்,​​ சிவ பக்​தி​யால் கோபா​ல​கி​ருஷ்ண பார​தி​யார் தனது "நந்​த​னார் சரி​தம்' மூலம் பர​மன் மீதும் சாகித்​யங்​கள் இயற்​றி​யது போல ஆபி​ர​காம் பண்​டி​தர் இயே​சு​பி​ரான் மீது பல சாகித்​யங்​க​ளைப் புனைந்​தி​ருக்​கி​றார்.​

  ÷கி​றிஸ்​தவ சம​யம் சார்ந்து இவ​ரது சாகித்​யங்​கள் அமைந்​தா​லும் "ஸ்ரீக​ண​நாத' என்​கிற விநா​ய​கர் கீதத்​து​டன் பண்​டி​த​ரும் தனது கீதங்​களை அமைத்​தி​ருப்​பது அவ​ரது பரந்த உள்​ளத்தை வெளிப்​ப​டுத்​து​கி​றது.​ அது மட்​டு​மல்ல,​​ தியா​க​ராஜ சுவா​மி​க​ளின் மீது மிகுந்த மரி​யா​தை​யும் ஈர்ப்​பும் கொண்​டி​ருந்த ஆபி​ர​காம் பண்​டி​தர்,​​ பல சாகித்​யங்​களை தியா​கய்​ய​ரைப் போலவே அமைத்​துக் கொண்டு தமி​ழில் இயற்றி இருக்​கி​றார்.​

  ÷ஆ​பி​ர​காம் பண்​டி​தர் தமிழ் இலக்​கி​யத்​திற்​கும் இசைக்​கும் தந்த கொடை "கரு​ணா​மி​ருத சாக​ரம்' என்​கிற நூல்.​ 1914-ஆம் ஆண்​டு​வரை வாழ்ந்த இசை வித்​த​கர்​கள்,​​ இய​லி​சைப் புல​வர்​கள்,​​ இசை ஆர்​வ​லர்​கள்,​​ புர​வ​லர்​கள் பற்​றிய கருத்​துக் களஞ்​சி​ய​மாக அந்த அக​ர​முத​லி​யைத் தொகுத்​தி​ருக்​கி​றார் பண்​டி​தர்.​

  ÷தி​ரு​வா​ரூர் அர​சர் கல்​லூரி முதல்​வ​ரா​கப் பணி​யாற்​றிப் பணி​நி​றைவு பெற்ற சண்​முக.​ செல்​வ​க​ண​ப​தி​யும்,​​ தஞ்​சைத் தமிழ்ப் பல்​க​லைக்​க​ழக இசைத்​து​றை​யில் உத​விப் போரா​சி​ரி​ய​ரா​கப் பணி​யாற்​றும் முனை​வர் செ.கற்​ப​க​மும் "இசைத்​த​மிழ் அறி​ஞர் ஆபி​ர​காம் பண்​டி​தர்' என்​கிற புத்​த​கத்​தைத் தொகுத்​தி​ருக்​கி​றார்​கள்.​ அரிய பல செய்​தி​க​ளைத் தாங்கி வந்​தி​ருக்​கும் தொகுப்பு.​

  * * * *

  எட்டு ஆண்​டு​க​ளுக்கு முன்​னால் டிசம்​பர் 26-ஆம் தேதி உலகை பீதி​யில் ஆழ்த்​திய ஆழிப்​பே​ர​லை​யின் கோரத்​தாண்​ட​வத்​தால் ஏற்​பட்ட வடுக்​க​ளின் தழும்​பு​கள் இன்​னும் மறைந்​த​பா​டில்லை.​ இந்​தோ​னே​ஷி​யா​வில் சுமத்​திரா தீவு​க​ளுக்கு அரு​கில் கட​லுக்கு அடி​யில் ஏற்​பட்ட பூகம்​பத்​தின் விளை​வாக இந்​து​மகா சமுத்​தி​ரமே கொந்​த​ளித்​தது.​ "சுனாமி' என்று பர​வ​லாக அறி​யப்​ப​டும் அந்த ஆழிப்​பே​ர​லை​யால் தாக்​கப்​பட்ட சென்னை,​​ கட​லூர்,​​ நாகப்​பட்​டி​னம் போன்ற கடற்​க​ரைப் பகு​தி​கள்,​​ கட​லோ​ரப் பகு​தி​களை மட்​டு​மல்​லா​மல் அங்கே வாழும் மனி​தர்​க​ளை​யும் அல்​லவா விழுங்​கி​யது!​

  ÷இ​யற்​கைச் சீற்​றங்​கள் என்​பது ஒன்​றும் புதி​தல்ல.​ நமது புரா​ணங்​கள் "பிர​ள​யம்' என்று குறிப்​பி​டும் இயற்​கை​யின் இறு​திச் சீற்​றம் எப்​போது நிக​ழும் என்று நமக்​குத் தெரி​யாது.​ ஆனால்,​​ பத்​தாண்​டு​க​ளுக்கு ஒரு முறை​யா​வது பூமி குலுங்​கு​கி​றது.​ கடல் கொந்​த​ளிக்​கி​றது.​ புய​லும் கொடுங்​காற்​றும் தாக்​கு​கின்​றன.​ இந்த இயற்​கைச் சீற்​றங்​களை எதிர் கொள்​வது எப்​படி?​ என்று புய​ல​டித்து ஓய்ந்​த​தும் அக்​க​றை​யு​டன் விவா​தித்​து​விட்டு மறந்து விடு​கி​றோம்.​

  ÷ச​மீ​பத்​தில் அமெ​ரிக்​கா​வைத் தாக்​கிய,​​ காத்​த​ரீனா,​​ சாண்டி போன்ற சூறைக்​காற்​றுத் தாக்​கு​தல்​க​ளில்,​​ தயார் நிலை​யில் இருக்​கும் அந்த நாடே நிலை​கு​லைந்து போயிற்று என்​றால்,​​ இந்​தியா போன்ற நாடு​க​ளின் கதி என்ன?​ அரசு இயந்​தி​ரம் செயல்​ப​டு​வ​தை​விட,​​ இந்​தி​யா​வில் தன்​னார்​வத் தொண்டு நிறு​வ​னங்​க​ளின் பங்​க​ளிப்​பு​தான் இது​போன்ற இயற்​கைச் சீற்​றங்​களை எதிர்​கொள்​வ​தில் பெரும் பங்கு வகிக்​கின்​றன என்​பது அனு​பவ உண்மை.​

  ÷"குரு​பி​ரியா' எழு​தி​யி​ருக்​கும் "இயற்​கைச் சீற்​றங்​களை எதிர்​கொள்​வது எப்​படி?​' என்​கிற புத்​த​கம் உல​கம் எதிர்​கொண்ட இயற்​கைச் சீற்​றங்​க​ளைப் பற்​றிய குறிப்​பு​க​ளு​டன்,​​ அதை எதிர்​கொள்ள நாம் என்​னென்ன செய்ய வேண்​டும் என்​ப​தை​யும் விவ​ரிக்​கி​றது.​

  ÷ம​ரங்​கள்,​​ காடு​கள் அழிக்​கப்​ப​டா​மல் பாது​காப்​ப​தால் உலக வெப்​ப​ம​ய​மா​தல் தடுக்​கப்​ப​டும்.​ சுற்​றுச்​சூ​ழல் மாசு​ப​டா​மல் பாது​காப்​ப​து​டன்,​​ நீர்​நி​லை​க​ளில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட்டு,​​ பரா​ம​ரிக்​கப்​ப​டு​வ​தும் அடுத்​த​கட்ட நட​வ​டிக்கை.​ ஆற்று மணல் கொள்ளை போதல்,​​ தொழிற்​சா​லைக் கழி​வு​கள் ஆறு​க​ளில் கலத்​தல்,​​ ஆழ்​து​ளைக் கிண​று​கள் மூலம் நிலத்​தடி நீரை உறிஞ்​சு​தல் போன்​றவை தடுக்​கப்​ப​டு​வது உறுதி செய்​யப்​பட வேண்​டும்.​

  ÷இது ஒரு முன்​னெச்​ச​ரிக்​கைக் கையேடு மட்​டு​மல்ல,​​ பல தக​வல்​களை உள்​ள​டக்​கிய விழிப்​பு​ணர்​வுப் பிர​சு​ர​மும் கூட!​

  * * * *

  ​யார் அந்த வி.சர​வ​ணன்?​ எனக்​குத் தெரி​யாது.​ இணை​ய​த​ளத்​தில் "தமிழ்க் கூடல்' என்​றொரு இதழ்.​ அதில் வெளி​வந்​தி​ருக்​கும் புதுக்​க​விதை இது.​ மர​புக் கவி​தை​யின் நேர்த்​தி​யு​டன் புனை​யப்​பட்​டி​ருக்​கும் புதுக்​க​விதை.​ ஆனால் எனக்கு மிக​வும் பிடித்​தது.​ நீங்​க​ளும் ரசிப்​பீர்​கள்.​

  ​வீழ்​வ​தும் அழகே -​ நீர​ரு​வி​யாய் இருந்​தால்!​ -​ தலை

  தாழ்​வ​தும் அழகே -​ நெற்​க​தி​ராய் இருந்​தால்!​

  தொடர்​தோல்​வி​கள் அழகே -​ அலை​க​ட​லாய் இருந்​தால்!​

  சித​றல்​கள் அழகே -​ விண்​மீ​னாய் இருந்​தால்!​

  கத​ற​லும் அழகே -​ கார்​மு​கி​லாய் இருந்​தால்!​

  அழ​கின் உரு​வாய் இருப்​பதை எல்​லாம்

  அழி​வின் உரு​வாய் பார்ப்​பது உனது பிழையோ?​

  அல்​லது,​​ மனிதா!​

  நீயே இயற்​கை​யின் இலக்​க​ணப் பிழையோ?​​

  kattana sevai