சுடச்சுட

  

  கலைக்​கோட்​டுத்​தண்டு​
  நிகண்டு நூலான இதில் சொற்​பொ​ருள் விளக்​கம் காணப்​ப​டு​கி​றது.​ அழிந்​து​விட்ட நூல்​க​ளுள் இது​வும் ஒன்று.​ இலக்​கண உரை நூல்​க​ளில் பெய​ர​ள​வில் மேற்​கோ​ளாக எடுத்​துக் கூறப்​பட்ட நூல்.​ காலம் அறி​தற்கு இல்லை.​

  ​கலை​சைச் சிலேடை வெண்பா​
  இந்​நூல் சுப்​பி​ர​ம​ணிய முனி​வ​ரால் இயற்​றப்​பட்​டது.​ இதி​லுள்ள சிலே​டைக்​கென அமைந்த சொற்​றொ​டர்​கள் தமிழ் அறி​வைப் பெருக்​கிக் கொள்​வ​தற்​குத் துணை செய்​ய​வல்​லன.​ இதில் வரும் சிலே​டைத் தொடர்​க​ளில் ""கண்​ட​காச் சாடும் கலை​சையே'' என்​பது ஒன்று.​ அத்​தொ​டர் ""கண்​டகா அச்சு ஆடும் கலை​சையே'' என்​றும்,​​ ""கண்​த​க​ரச்​சா​டும் கலை​சையே'' என்​றும் பிரித்து பொருள் தரு​வ​தைக் காண​லாம்.​ காலம் கி.பி.18-ஆம் நூற்​றாண்டு.​

  கள​வழி நாற்​பது​
  சோழன் செங்​க​ணான்,​​ சேர​மான் கணைக்​கால் இரும்​பொ​றை​யைச் சிறையி​லிட்​டான்.​ இச் சிறை​யி​னின்​றும் விடு​தலை செய்​யப் பொய்​கை​யார் என்​னும் புல​வர் இந்​நூ​லைப் பாடி​னார்.​ இந்​நூல் 41 வெண்​பாக்​க​ளைக் கொண்​டது.​ இதில் செங்​க​ணான் வீரம்,​​ போர்க்​கள இயல்பு முத​லி​யன பாடப்​பட்​டுள்​ளன.​ காலம் கடைச்​சங்க காலம்.​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai