சுடச்சுட

  
  t

  "கம்​ப​னைப் படிப்​ப​தற்கு முன்​னர்,​​ அவ​னைப் பார்த்து நான் சிரித்​துக் கிண்​டல் செய்து கொண்​டி​ருந்​தேன்;​ ஆனால்,​​ அவ​னைப் படிக்​கப் படிக்க,​​ அவன் என்​னைப் பார்த்து சிரித்​துக் கிண்​டல் செய்ய ஆரம்​பித்​தான்' என்​றார் ஒரு​முறை கவி​ஞர் கண்​ண​தா​சன்.​

  ""எப்​ப​டியோ கம்​ப​னுக்​கும்

  ​ ​ ​ ​ எனக்​கும் தொடர்​புண்டு;​

  செப்​பு​வ​தெல்​லாம் கம்​பன் ​

  ​ ​ ​ ​ செந்​த​மி​ழாய் வரு​வ​த​னால்

  அக்​கா​லம் அப்​பி​றப்​பில்

  ​ ​ ​ ​ அழகு வெண்ணை நல்​லூ​ரில்

  கம்​ப​னது வீட்​டில்

  ​ ​ ​ ​ கணக்​கெ​ழுதி வாழ்ந்​தேனோ...?​

  நம்​பு​கி​றேன் அப்​ப​டித்​தான்!​

  ​ ​ ​ ​ நான் படித்த படிப்​பெல்​லாம்

  எட்​டாம் வகுப்​பன்றி

  ​ ​ ​ ​ எட்​டுக்கு மேல் வகுப்பை

  எட்​டி​யும் பார்த்​த​தில்லை;​

  ​ ​ ​ ​ இலக்​க​ண​மும் கற்​ற​தில்லை!​

  கம்​பன் கொடுத்​தக்

  ​ ​ ​ ​ கவிப்​பிச்சை ஓர​ளவு;​

  கண்​ணன் கனிந்​த​ளித்த

  ​ ​ ​ கை முதல்​கள் ஓர​ளவு;​

  கம்​பனை நான் பாடிக்

  ​ ​ ​ களிப்​ப​தற்​குக் கார​ணமே

  தம்​பிக்​குக் கொஞ்​சம்

  ​ ​ ​ தந்து வைத்​தான் என்​ப​த​னால்.​

  தந்தை எனக்​குத்

  ​ ​ ​ தந்​த​தெல்​லாம் புத்​தி​மதி!​

  கம்​பன் எனக்​குக்

  ​ ​ ​ கருணை செய்​தான் இந்த மதி!​

  தாயார் எனக்​குத் ​

  ​ ​ ​ தந்​த​தெல்​லாம் அன்பு மொழி;​

  தாயான கம்​பன்

  ​ ​ ​ தந்​த​து​தான் இந்த மொழி...!​''​

  புதுச்​சேரி கம்​பன் விழா ஒன்​றில் கவி​ய​ரங்​கத் தலைமை ஏற்​ற​போது,​​ கண்​ண​தா​சன் படித்த முன்​னு​ரைக் கவிதை வரி​கள் இவை.​

  ÷இன்​றைய படைப்​பாளி எவ​ரும்,​​ கம்​பனை விட்​டு​விட்​டுத் தாண்​டிப்​போய்​விட முடி​யாது.​ கவி​தை​யா​யி​னும் சரி;​ கதை​யா​யி​னும் சரி;​ நாட​க​மா​யி​னும் சரி,​​ ஒரு படைப்பு எப்​ப​டி​யி​ருந்​தால் முழுமை அடை​யும் என்​ப​தைக் கம்​ப​னி​ட​மி​ருந்து கற்​றுக்​கொள்ள முடி​யும்.​

  ÷கா​ன​கத்​தில்,​​ சீதை​யு​ட​னும்,​​ இலக்​கு​வ​னு​ட​னும்,​​ இயற்கை அழ​கைக் கண்டு ரசித்​த​படி சென்று கொண்​டி​ருக்​கி​றான் ராமன்.​ வழி​யில் கோதா​வரி ஆறு குறுக்​கிட்​டது.​ அந்த ஆற்​றின் எழி​லைச் சொல்ல விரும்​பு​கி​றான் கம்​பன்.​ ஆற்​றின் அழ​கைச் சொல்​கிற அழ​கோடு அழ​காக,​​ ஒரு கவிதை எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தை​யும் சொல்​லி​வி​டு​கி​றான்.​

  ""புவி​யி​னுக்கு அணி​யாய்,​​ ஆன்​ற

     ​ பொ​ருள் தந்து,​​ புலத்​திற்​றாகி

  அவி அகத் துறை​கள் தாங்கி,​​

     ​ ஐந்​திணை நெறி அளாவி,​​

  சவி உறத் தெளிந்து,​​ தண்​ணென்

     ​ ஒழுக்​க​மும் தழுவி,​​ சான்​றோர்

  கவி எனக் கிடந்த கோதா​வ​ரி

     ​ யினை வீரர் கண்​டார்''​

  வழி​யில் அவர்​கள் மூவ​ரும் கண்ட கோதா​வரி ஆறு,​​ மிகப்​பெ​ரிய கவி​ஞன் ஒரு​வ​னின் கவி​தை​யின் எழி​லோடு இருந்​தது என்று உவமை சொல்​கி​றார் கம்​பர்.​

  ÷ஓர் ஆறு எப்​படி கவி​தை​போல இருக்க முடி​யும்?​ இதற்கு விளக்​கம் சொல்ல நுழை​கிற கம்​பன்,​​ ஒரு நல்ல கவிதை எப்​படி இருக்க வேண்​டும் என்று படம் போட்​டுக் காட்​டி​வி​டு​கி​றான்.​ ஆறு என்​னென்ன விதங்​க​ளில் அழ​காக இருந்​தது...?​

  ÷பூ​மி​யெ​னும் பெண்​ணுக்கு ஓர் அழ​கிய ஆப​ர​ணம் போன்​றி​ருக்​கி​றது;​ மலையி​லி​ருந்து உருண்​டோடி வரும்​போது,​​ மலை​யில் கிடைக்​கும் உய​ரிய பொருள்​க​ளை​யெல்​லாம் வாரிக்​கொண்டு வந்து,​​ ஆறா​கப் பாய்ந்​தோ​டு​கி​றது;​ தனது வளத்​தால்,​​ பாய்ந்​தோ​டும் வழி​யெல்​லாம் செழு​மை​யுண்​டாக்கி விளைச்​சல் பொருள்​களை மக்​க​ளுக்​குத் தரு​கி​றது;​ விளை நிலங்​கள் செழு​மை​யு​ட​னி​ருக்க உத​வு​தல் மட்​டு​மன்றி,​​ வெள்​ளப் பெருக்​கா​க​வும்,​​ வாய்க்​கால் வழி​யா​க​வும்,​​ நீர் நிலை​க​ளாக எங்​கும் பரவி நிற்​கி​றது;​ நீர்த்​து​றை​க​ளைப் போகும் வழி​யெங்​கும் கொண்​டி​ருக்​கி​றது.​

  ÷த​மி​ழி​னம் நிலங்​க​ளைக் குறிஞ்சி,​​ முல்லை,​​ மரு​தம்,​​ நெய்​தல் மற்​றும் பாலை என்று ஐந்து வகை​க​ளா​கப் பிரித்​தி​ருக்​கி​றது;​ கோதா​வரி ஆறு,​​ இந்த ஐவகை நிலங்​க​ளின் வழி​யா​க​வும் செல்​கி​றது.​ மிக்க ஆழத்தி​லி​ருக்​கும் பொரு​ளும் கண்​ணுக்​குத் தெரி​யும்​படி,​​ தெளி​வான நீரை உடை​ய​தா​யி​ருந்​தது;​ குளிர்ந்த நீர்ப் பெருக்கை,​​ எல்லா காலங்​க​ளி​லும் உடை​ய​தாக இருந்​தது.​

  ÷கோ​தா​வரி ஆறு எப்​படி இருந்​தது என்ற கம்​ப​னின் கவி​தைக்கு விளக்​கம் இப்​ப​டித்​தான் அமை​கி​றது.​ சரி,​​ ஒரு கவிதை எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தற்​கான விளக்​கம் இந்​தப் பாட​லி​லேயே எப்​ப​டிக் கிடைக்​கி​றது...?​

  ÷உ​ல​கத்​தில் உயர்ந்​தோர் பல​ரா​லும் கொண்​டா​டப்​ப​டக்​கூ​டிய எழி​லைக் கொண்​டி​ருக்க வேண்​டும்;​ அறம்,​​ பொருள்,​​ இன்​பம்,​​ வீடு என்று பெரி​யோர் வகுத்​த​வற்றை உள்​ள​டக்​கிய பொருள் நிறைந்து விளங்க வேண்​டும்;​ கற்​போர்க்கு நுண்​ண​றிவை வளர்ப்​ப​தாக இருக்க வேண்​டும்.​ ஆழ்ந்து சிந்​திக்​கச் சிந்​திக்க,​​ புதுப்​புது விளக்​கங்​கள் கிடைப்​ப​தாக இருக்க வேண்​டும்;​ அகப்​பொ​ருள் என்று தமி​ழி​னம் குறித்த,​​ களவு,​​ கற்பு என்​னும் ஒழுக்​கங்​க​ளின் தன்​மை​யைக் கூறு​வ​தா​க​வும்,​​ கற்​போ​ரின் மனத்​து​யரை மாற்​று​விக்​கிற தன்மை கொண்​ட​தா​க​வும் இருக்க வேண்​டும்.​

  ÷கு​றிஞ்சி,​​ முல்லை,​​ மரு​தம்,​​ நெய்​தல் மற்​றும் பாலை என்​னும் ஐவகை நிலங்​க​ளின் ஒழுக்​க​மாக,​​ முறையே புணர்​தல்,​​ இருத்​தல்,​​ பிரி​தல்,​​ இரங்​கல் மற்​றும் ஊடல் எனத் தமிழ் இலக்​க​ணம் பிரித்​துள்​ளது.​ இவற்​றின் நெறி முறை​கள் நிறைந்​த​தாக இருக்க வேண்​டும்.​

  ÷சற்​றும் பொருள் மயக்​க​மின்றி,​​ அழ​கும் பொரு​ளும் எளி​தில் விளங்​கு​வ​தாய் அமை​யப் பெற்​றி​ருக்க வேண்​டும்.​ எவ்​வி​தத்​தி​லும் தீய ஒழுக்​கங்​களை நியா​யப்​ப​டுத்​தா​மல்,​​ உயர்ந்த ஒழுக்​கங்​க​ளைப் பற்றி மட்​டுமே பேசு​வ​தாய் இருக்க வேண்​டும்.​

  ÷இந்த ஒரு பாட​லில் கோதா​வரி ஆற்​றின் எழி​லும் விளங்​கி​வி​டு​கி​றது;​ சிறந்த படைப்​பொன்று எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தும் விளக்​கப்​பட்​டு​வி​டு​கி​றது.​

  ÷இந்த விளக்​கங்​கள்,​​ இன்​றைய படைப்​பா​ளி​க​ளுக்​கும் வழி​காட்​டு​வ​தாக உள்​ள​து​தான் கம்​ப​ரின் தனிச்​சி​றப்பு.​ வெறும் அறி​வு​ரை​யாக இன்றி,​​ இதி​லி​ருந்து சற்​றும் பிற​ழா​மல் தனது காப்​பி​யத்​தைக் கம்​பர் கொண்டு சென்​றி​ருக்​கி​றார்.​ பத்​தா​யி​ரம் பாடல்​க​ளுக்​கு​மேல் எழு​தி​ய​வ​ரின் படைப்​பில்,​​ சிறு பிச​கு​கூட இல்லை என்​பதே இன்​றைய படைப்​பா​ளர்​க​ளுக்​கான நெறி​முறை.​

  ​(த.இராம​லிங்​கத்​தின் "21-ஆம் நூற்​றாண்​டில் கம்​பன்' நூலி​லி​ருந்து...)​​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai