சுடச்சுட

  

  ​(ர, ற பொருள் வேறு​பாடு)

  சீரிய -​ சினந்த,​​ சிறந்த,​​ சீராய்​

  சீறிய -​ சினந்த​

  சுரா​ -​ கள்​

  சுறா​ -​ சுறா மீன்​

  சூரல்​ -​ மூங்​கில்,​​ பிரம்பு​

  சூறல்​ -​ தோண்​டல்​

  சுருக்கு​ -​ வலை,​​ சுருக்​கம்,​​ கட்டு,​​ பூமாலை,​​ வகை,​​ குறைவு,​​ நெய்த்​து​டுப்பு​

  சுறுக்கு​ -​ விரைவு​

  செரு​ -​ போர்,​​ ஊடல்​

  செறு​ -​ வயல்,​​ பாத்தி,​​ குளம்​

  செரு​நர்​ -​ பகை​வர்,​​ படை​வீ​ரர்​

  செறு​நர்​ -​ பகை​வர்​

  சொரி​ -​ தினவு,​​ அரிப்பு,​​ பொழி​

  சொறி -​ சிரங்கு,​​ சொறி​தல்​

  தரித்​தல்​ -​ அணி​தல்,​​ பொறுத்​தல்,​​ தங்​கல்,​​

  தாம​தித்​தல்,​​ தாங்​கு​தல்​

  தறித்​தல் -​ வெட்​டு​தல்​

  தரி​ -​ அணி,​​ அணிந்​து​கொள்​

  தறி -​ தூண்,​​ ஆப்பு,​​ நெசவு இயந்​தி​ரம்,​​ முளைக்​கோல்​

  தரு​தல் -​ கொடுத்​தல்​

  தறு​தல்​ -​ இறு​கக்​கட்​டு​தல்​

  தாரு​ -​ மரம்,​​ தேவ​தாரு,​​

  பித்​தளை​

  தாறு​ -​ குலை,​​ அங்​கு​சம்,​​ முள்,​​ இரும்பு,​​ முள்​கோல்​

  திரம்​ -​ மலை,​​ உறுதி,​​ நிலை,​​ பூமி​

  திறம்​ -​ உறுதி,​​ நரம்​புள்ள வீணை,​ கூறு​பாடு,​​ சுற்​றம்,​​ குலம்,​​ பக்​கம்,​​ வல்​லமை,​​ ஒழுக்​கம்,​​ மேன்மை

  வர​லாறு,​​  கார​ணம்​

  திரை​ -​ அலை,​​ கடல்,​​ திரைச்​சீலை​

  திறை​ -​ கப்​பம்​

  துரவு​ -​ கிணறு​

  துறவு​ -​ துறத்​தல்,​​ துற​வ​றம்​

  துரை​ -​ பெரி​யோன்,​​

  தலை​வன்​

  துறை​ -​ நீர்த்​துறை,​​ வழி,​​ இடம்,​​ நூல்,​​ கடற்​கரை,​​ உபா​யம்,​​  பாவி​னம்​

  துரு​ -​ களிம்பு​

  துறு​ -​ கூட்​டம்,​​ நெருக்​கம்​

  தூரல்​ -​ தூரு​தல்,​​ வருத்​தம்​

  தூறல்​ -​ மழைத்​துளி,​​ பழி சொல்​லு​தல்​

  தூரன்​ -​ குலத்​தின் பெயர்​

  தூறன்​ -​ மூர்க்​கன்​

  துரு​ -​ வீதி​

  துதறு​ -​ அழி​

  தேரார்​ -​ கல்​லா​த​வர்,​​

  கீழ்​மக்​கள்,​​ பகை​வர்​

  தேறார்​ -​ அறி​வி​லார்,​​ பகை​வர்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai