மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - பாஜக அமோக வெற்றி!போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மயங்கொலிச் சொற்கள்(ல, ழ, ள பொருள் வேறுபாடு)

அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை அழகு - வனப்பு அளகு - சேவல், பெண்கூகை அலகம் - திப்பிலி அளகம் - வெள்ளெருக்கு, நீர் அலகை - கற்றாழை, பேய் அளகை - அளகாபுரி, பெண் அழம் - பிணம் அலம் - கலப்பை அளம் - உப்பு

Updated On :29 செப்டம்பர் 2012, 1:58 pm IST

அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை

அழகு - வனப்பு

அளகு - சேவல், பெண்கூகை

அலகம் - திப்பிலி

அளகம் - வெள்ளெருக்கு, நீர்

அலகை - கற்றாழை, பேய்

அளகை - அளகாபுரி, பெண்

அழம் - பிணம்

அலம் - கலப்பை

அளம் - உப்பு

அலத்தல் - அலட்டல், அலைதல்

அளத்தல் - அளவிடுதல், மதித்தல்

அலவன் - ஆண்நண்டு

அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்

அழி - அழித்துவிடு

அலி - பேடி, காகம், விருச்சிகராசி

அளி - கருணை, கள், வண்டு

அல்லல் - துன்பம்

அள்ளல் - வாரி எடுத்தல்

அழை - கூப்பிடு

அலை - கடல், நீரலை, அலைதல்

அளை - தயிர், நண்டு, புற்று

அவல் - பள்ளம், உணவுப் பொருள்

அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)

அல் - இரவு

அள் - அள்ளி எடு, நெருக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.