சுடச்சுட

  
  TM-2

  அருமறை காவாத நட்பும் பெருமையை

  வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டானும்

  செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர்

  ஒன்றா ளெனப்படு வார். (பாடல்-55)

   

  வெளிப்படுத்தலாகாத மறையினை, உள்ளத்தடக்காத நண்பனும்; மனையறத்திற்குத் தக்க மாண்பினை விரும்பாமல், விட்டு நீங்கிய மனைவியும்; எவ்விடத்திலும் கறுவுறுதலை (செற்றம் - கறு; கோபம், அகங்காரம்) மேற்கொண்டு உரையாடும் குற்றேவலாளனும் ஆகிய இம்மூவரும் ஒற்றாள்(ஒற்றர்) எனப்படுவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai