சுடச்சுட

  
  TM-2

  பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
  விலங்கின் பிறப்பின் வெருவும் - புலந்தெரியா
  மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை மிம்மூன்றும்
  துக்கப் பிறப்பாய் விடும். (பாடல்-60)

  பேய்ப் பிறப்பின்கண் மிக்க பசியாகிய துன்பமும்; பாயும் இயல்புடைய விலங்காகிய பிறப்பின்கண் அச்சமாகிய துன்பமும்; மனிதப் பிறப்பின்கண் அறிவு விளங்காமைக்கு ஏதுவாகிய வறுமையாகிய துன்பமும் (உள்ளன; ஆதலால்) இந்த மூன்றும் துக்கத்தைத் தரும் பிறவியாய் முடியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai