சுடச்சுட

  
  TM-1

  ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல்
  எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும்
  மாறேற்கு மன்னர் நிலையறித லிம்மூன்றும்
  சீரேற்ற பேரமைச்சர் கோள். (பாடல்-61)


  ஐம்பொறிகளின் அறிவும் தமக்கு வயமாக ஒழுகுதலும்; தம் அரசர்க்கு இனி வரக்கூடிய துன்பத்தை முன்னறிந்து வராமற் காத்தலும்; பகைமையை ஏற்கும் அரசரது நிலைமையை நாள்தோறும் தெரிந்தொழுகுதலும் ஆகிய இந்த மூன்றும் புகழினைக்கொண்ட பெருமையுடைய அமைச்சர்களின் கடமையாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai