பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர்,  வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும், கிணற்றினுள்ளே வாழும் தவளையைப் போல்,  தாமுங் கருதாமல், நூல்களை நாள் முழுமையும்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உணற்(கு) இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.   (பாடல்-61)


குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர்,  வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும், கிணற்றினுள்ளே வாழும் தவளையைப் போல்,  தாமுங் கருதாமல், நூல்களை நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும் (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. "கற்றலில் கேட்டலே நன்று' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com