நன்மைகள் அடைந்தே தீரும்

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால்,
 நன்மைகள் அடைந்தே தீரும்

பழமொழி நானூறு
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
 விழுமியோன் மேற்சென் றதனால் - விழுமிய
 வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
 தீண்டா விடுதல் அரிது. (பாடல்-62)
 சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகாற்சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டுவந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாதொழியினும், அடைதற்குரியவாய் நின்ற நன்மைகள், அவனைஅடையாது நிற்றல் இல்லை. (க-து) தமக்கு வரவேண்டிய நன்மைகள் வந்தே தீரும். "உறற்பால தீண்டா விடுதல் அரிது' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com