சுடச்சுட

  
  LOTUS

  பழமொழி நானூறு
   பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
   இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
   போந்(து) இறை யாயதூஉம் பெற்றான் பெரியாரைச்
   சார்ந்து கெழீஇயிலார் இல். (பா-92)
   இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன், பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக, தான் சென்று (அவனது சார்பைப் பெற்று), இலங்கைக்கே தலைவனாய அரச பதவியை அடைந்தான், (ஆதலால்) பெரியோர்களைச் சார்பாகப் பெற்று, (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்) பயன் அடையாதார் இல்லை. (க-து) பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன் பெறுவர் என்பதாம். "பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல்' என்பது பழமொழி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai