சுடச்சுட

  
  tm1


  நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
  இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
  கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
  சொற்சோரா தாரோ இலர்.    (பா}94)

  மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!  நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும்,  (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள்.  நல்ல குடியின்கட் பிறவாதார்,  (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எது பற்றி? யாவரே யாயினும்,  சொல்லின்கண் சோர்வுபடாதார் இலர்."சொற்சோரா தாரோ இலர்' என்பது பழமொழி. 

  "காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்' என்பது திருக்குறள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai