சுடச்சுட

  
  tm3

   

  தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
  செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
  சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
  நுகத்துப் பகலாணி போன்று.     (பா-95)


  தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா. வாளாற் செத்துக,  அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக,  மனம் பொருந்தி,  நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப,  ஒன்றுபட்டவனாகி நடுவு நிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம். (க-து.) காய்த லுவத்த லின்றி ஒழுகும் அமைதியே தவமாம். 
  "நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai