பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்லசெத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.     (பா-95)


தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகா. வாளாற் செத்துக,  அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக,  மனம் பொருந்தி,  நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப,  ஒன்றுபட்டவனாகி நடுவு நிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம். (க-து.) காய்த லுவத்த லின்றி ஒழுகும் அமைதியே தவமாம். 
"நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com