பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்துமாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய்! செய்வதென்
வல்லை அரசாட் கொளின்.        (பாடல்-110)    

முல்லை மலரை ஒத்த புன்முறுவலை உடையாய்!  இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில், அவர்தங் குறிப்பினையும், தன்னால் உயிர்கொள்ளப் படுதலுடையார் கூறும் மாற்றத்தினையும் ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல),  அரசன் குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின் செய்வது என்ன இருக்கின்றது? (க-து.) குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமை கொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான். "செய்வதென் வல்லை அரசாட் கொளின்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com