சுடச்சுட

  

  தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். பிறமொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது, இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை "பசை' எழுத்து என்றும், "ஒட்டு எழுத்து' என்றும் கூறலாம். ஒரு சொல்லில் ஒற்று வந்தால் ஒரு பொருள்; ஒற்று வரவில்லை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் சொல் வேறுபாடு - பொருள் வேறுபாடுகள் சிலவற்றைக் காண்போம்.
   அரிசிக் கடை - அரிசி விற்கும் வியாபார நிலையம்
   அரிசி கடை - அரிசியைக் கடை, அரிசியை ஆட்டு.
   ஆடிப்பெருக்கு - ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுக்கும் ஒரு திருவிழா - பதினெட்டாம் பெருக்கு.
   ஆடி பெருக்கு - நடனம் ஆடிக்கொண்டே பெருக்கு அல்லது வீட்டைக் கூட்டு.
   கடைச்சரக்கு - மட்டமான பொருள் (அ) சரக்கு.
   கடை சரக்கு - கடையில் இருக்கும் பொருள்.
   கீரைக்கடை - கீரை விற்கும் வியாபாரக் கடை
   கீரை கடை - சாப்பிடுவதற்குக் கீரையைக் கடை
   நகைக் கடன் - நகைக்குக் கடன் தரப்படும்
   நகை கடன் - நகை கடனாகத் தரப்படும்
   பூட்டுச்சாவி - பூட்டுக்கான சாவி
   பூட்டு சாவி - பூட்டும், சாவியும் (உம்மைத் தொகை)
   கருப்புப் பணம் - வருவாயைத் தவிர லஞ்சமாக வந்த (கணக்கில் வராத) பணம்
   கருப்பு பணம் - கருமை நிறமுடைய பணம்
   கைம்மாறு - நன்றி செலுத்துதல்
   கை மாறு - ஒரு பொருள் கை மாறுதல்
   உடும்புப்பிடி - உடும்பைப்போல அழுத்திப்பிடி
   உடும்பு பிடி - உடும்பைப் பிடி
   கடைப்பிடி - பின்பற்று, ஒழுகு, செய்
   கடை பிடி - வாடகைக்கு ஒரு கடை எடு - பிடி
   புகைப் பிடிக்காதே - சிகரெட் குடிக்காதே
   புகை பிடிக்காதே - காற்றில் கலந்து வரும் புகையைக் கையால் பிடிக்காதே.
   யானைப் பாகன் - யானையை மேய்ப்பவன்
   யானை பாகன் - யானையும், பாகனும் (உம்மைத்தொகை)
   முத்துச்சிப்பி - முத்து உள்ள சிப்பி
   முத்து சிப்பி - முத்தும், சிப்பியும் (உம்மைத்தொகை)
   வாய்ப்பாடு - வாயின் வெளிப்புறம், வாயின் விளிம்பு
   வாய்பாடு - இலக்கணம், சூத்திரம், கொள்கை
   தங்கப்பலகை - தங்கத்தால் ஆனப் பலகை, இருக்கை
   தங்க பலகை - தங்குவதற்கானப் பலகை
   தந்தப் பல்லக்கு - தந்தத்தினால் ஆன பல்லக்கு
   தந்த பல்லக்கு - ஒருவர் கொடுத்த பல்லக்கு
   புதுமனைப் புகும் விழா - புதியதாகக் கட்டப்பட்ட வீட்டில் நாம் குடிபுகும் விழா
   புதுமனை புகும் விழா - புதியதாகக் கட்டப்பட்ட வீடு எங்கோ ஓடி ஒளிந்து புகுந்து கொள்ளும் விழா
   கடைத்தெரு - வியாபாரக் கடைகள் உள்ள தெரு
   கடை தெரு - கடைசியான தெரு, கடையும், தெருவும்
   (உம்மைத் தொகை)
   கல்வித் தொகை - கல்விக்கான தொகை
   கல்வி தொகை - கல்வியும், தொகையும் (உம்மைத் தொகை)
   கைப்பை - கையில் உள்ள பை
   கை பை - கையும், பையும் (உம்மைத்தொகை)
   மோர்க் குழம்பு - மோரால் ஆனக் குழம்பு
   மோர் குழம்பு - மோரும், குழம்பும் (உம்மைத்தொகை
   ஆடித்தள்ளுபடி -ஆடி மாதத்தில் பொருள் வாங்கி னால் காசுத் தள்ளுபடி
   ஆடி தள்ளுபடி - 12 மாதங்களில் ஆடி மாதம்
   இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது.
   பிழைத்திருத்தம் - பிழையின் திருத்தம் மட்டும்
   பிழை திருத்தம் - பிழையும், திருத்தமும் (உம்மைத்தொகை)
   தெருக்கோடி-தெருவின்கோடி
   தெரு கோடி-தெருவும், கோடியும்(உம்மைத்தொகை)
   நகரக்காவல் நிலையம் - நகர மக்களின் நல்
   வாழ்வுக்காகச் செயல்படும் காவல் நிலையம்
   நகர காவல் நிலையம் - நகர்ந்து செல்வதற்கு ஒரு
   காவல் நிலையம்
   ÷"சொல்லாய்வுச் செம்மல்'
   வய்.மு.கும்பலிங்கன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai